வியாழன், 28 பிப்ரவரி, 2019

கமலஹாசன் கட்சி ,, நடிக்க விருப்பம் உள்ளவர்கள் 10000 முற்பணம்.. அங்கத்துவம் அவசியமில்லை

சாவித்திரி கண்ணன் : புதுசா படமெடுக்க வரும் ’’உப்புமா’’ கம்பெனி
தாயாரிப்பாளர்கள், ‘’ நடிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரப்படுத்தி,
அப்படி வருபவர்களிடமே வசூல் செய்து கல்லா கட்டுவது தான் ஞாபகத்திற்கு வந்தது..!
தேர்தலில் போட்டியிட விரும்ப்புவர்கள் யாராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.என் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை.விண்ணப்பத்தின் விலை ரூ 10,000 என்று கமலஹாசன் அறிவித்துள்ளார். இத்தனை நாளும் கட்சிக்கு ஆள் சேர்த்து,சொந்த பணத்தை செலவழித்து..தலைவரின் அழைப்பிற்கெல்லாம் ஒடி சென்று பாடுபட்ட கட்சியின் வட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள் மனம் எப்படி வலிக்கும்..!
இப்படித் தான் வசூல் நடத்த வேண்டும் என்றால்..ஒரு நல்ல ஐடியா தருகிறேன்..!

கட்சித்தலைவர்பதவிக்குவிண்ணபிக்கலாம்,விண்ணப்பத்தின் விலை இத்தனை கோடி..! என்று அறிவித்துவிடுங்கள் ஐயா,ராசா...கமலஹாசா...!
பாரிவேந்தர் மாதிரியானவர்கள் வாங்க முன் வரலாம்..!
நீங்க, நம்ம ராமதாஸ் ஐயா மாதிரி நிறுவனத் தலைவராக இருந்து ஜமாய்க்கலாம்...!
மற்ற கட்சிகள் கெடக்குது.பிழைக்க தெரியாத மண்ணுக..அதுவும் கம்யூனிஸ்ட் கட்சியில பாவிங்க, உறுப்பினராக சேருவதற்கே ஆறு மாத காலம் பரிட்சார்த்த உறுப்பினராக இருக்க வேண்டும் என்பார்கள்...! பிறகு மக்கள் பிரதிநிதித்துவ பொறுப்புக்கு விண்ணபிக்க கடந்த காலத்தில் கட்சிக்கும், மக்களுக்கும் செய்த தொண்டுகள் குறித்து பரிசீலிப்பார்கள்..!
நமக்கு அதெல்லாம் சரிபடுமா..! உலக நாயகா..!
வசூல் ராஜா... எம்.பி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக