வியாழன், 31 ஜனவரி, 2019

வல்லாரை என்று விற்கப்படுவது dollarweed எனப்படும் அழிக்கப்படவேண்டிய தாவரம்?

Rubasangary Veerasingam Gnanasangary : வல்லாரையில் கலப்படம்.
வல்லாரையானது கரட் சீரகம், செலரி மற்றும் பார்ஸ்லி போன்றனவற்றின் தாவர குடும்பத்தை சேர்ந்ததாகும்.  Centella என்பது வல்லாரை இனங்களின் பொதுப்பெயர் ஆகும்.
Gotu Kola என்னும் சிங்கள பெயர் பொதுவாக பல மொழிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். வல்லாரையின் பெயரில் போலி வல்லாரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இங்கு ஒரே படத்தில் ஐந்து வெவ்வேறு வகைகளான தாவரங்களின் படங்களை இணைத்துள்ளேன். 
அவற்றில் எதுவுமே வல்லாரைகளும் இல்லை வல்லாரைக்கு எந்த வகையிலும் உறவும் இல்லை. 
அவை Hydrocotyle எனப்படும் பிரபல்யமான நீர்த்தாவரங்கள் ஆகும். 
படத்தில் உள்ளது போன்ற Dollarweedஐ  யாழ்ப்பாணத்தில் பயிருடுகிறார்கள். அதை வல்லாரை என்றே விற்பனை செய்கிறார்கள்.
Dollarweed என்னும் தாவரத்தை தென்கிழக்கு ஆசியா எங்கும் காணமுடியும். இதை இருபது வருடங்களுக்கு முன்னர் Ground cover பயிராக (not cover crop) அறிமுகப் படுத்தினர். அலங்கார நீர்த்தாவர வர்த்தகத்தாலும் பரவியுள்ளது. ஆனால் அவை விரைவாக ஆக்கிரமித்து அழிக்க முடியாத பயிராக மாறிவிட்டன.  இவற்றை ஆடு மாடுகள் உண்பதால் ஈரல் பாதிக்கப் படுகிறது என்கின்ற அச்சத்தால் மக்களும் இதை உண்பதை தவிர்த்து வந்தனர். 

ஆனால் பின்னர் Liver fluke என்னும் ஒட்டுண்ணி அந்த தாவரத்தின் ஊடாக விலங்குகளுக்கு கடத்தப்படுகிறது என்பதை கண்டுபிடித்தனர். 
அதனால்தான் பிலிப்பீன்சில் இறைச்சிக் கடைகளில் ஈரல் விற்கப்படுவது மிகவும் அரிது. 
Liver fluke மனிதர்களையும் தாக்கும் வல்லமை கொண்டது. 
Dollarweed என்னும் தாவரத்தை கூகுளில் தேடினால் அதை எப்படி அழிப்பது என்கின்ற கட்டுரைகள் வருமே ஒழிய எப்படி சம்பல் போடுவது என்கின்ற பேச்சே இருக்காது. 
அதே நேரத்தில் google இல் ஒரு பெரிய பிரச்சனையும் உண்டு. 
Gotu Kola அல்லது Centella Asiatica என்று தேடினால் பதிக்குப் பாதி இந்த Dollarweed தான் வருகிறது. Dollarweedஐ வல்லாரையாக நினைத்து எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உண்டு. 

செய்தித்தாள்கள் கூட பிரசுரித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட Dollarweedஐ ஆயுர் வேத மருந்தாக வேற எழுதியுள்ளார்கள். 
இதை பொடிசெய்துகூட Gotu Kola என்று மருந்தாக விற்பனை செய்கிறார்கள். இந்த தாவரத்தை எப்படி அழிக்கலாம் என்று பல நாட்டு விஞ்ஞானிகளும் பேசிக்கொண்டிருக்கும் போது நம்மவர்கள் இதை பயிருடுகின்றனர். 
இந்த தாவரம் மிகவும் வேகமாக நிலங்களை ஆக்கிரமிக்கக் கூடிய மண்ணுக்கு சொந்தம் இல்லாத விலங்குகளுக்கும் விவசாயத்துக்கும் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல தாவரம் ஆகும். இதை தடை செய்வது பற்றி கடுமையாக சிந்திக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக