புதன், 30 ஜனவரி, 2019

பானுப்பிரியா கைதாவாரா? .. 14 வயது சிறுமிக்கு பானுப்பிரியாவின் அண்ணன் பாலியல் தொந்தரவு

- Veteran south Indian actress Bhanupriya has been accused of harassing a teenage girl whom she allegedly hired as domestic help. A police complaint against the actress was filed in Andhra Pradesh on Thursday after allegations by the 14-year-old girl's mother.
வெப்துனியா :தமிழ் சினிமாவில் முன்னாள் ஹீரோயினாக வலம் வந்தவர் பானுப்பிரியா. இவர் தற்போது பிரபல டிவி சேனல்களில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.அண்மையில் பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த 14 வயது சிறுமிக்கு பானுப்பிரியாவின் அண்ணன் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி அந்த சிறுமியின் தாய் ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டயில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: வீட்டில் குடும்ப சூழ்நிலையின் காரணாமாக எனது மகள் ( 14 ) சந்தியாவை திரைப்பட நடிகை பானுப்பிரியாவின் வீட்டிற்கு வேலைக்காக அனுப்பி வைத்தோம். மாதம் என் மகளூக்கு 10000 ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறியதால் நாங்கள் ஒப்புக்கொண்டு மகளை அவர்களுடன் அனுப்பி வைத்தோம். மாதாமாதம் 10,000ரூபார் சம்பளம் தருவதாகவும் வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் கடந்த ஒன்றரை வருடமாக மகளுக்கு பேசிய சம்பளத்தைக் கொடுக்கவில்லை.

மேலும் எம் மகள் சந்தியாவுக்கு பானுப்பிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மனரீதியாகவும் பல தொல்லைகள் தந்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட என் மகள் வேறு ஒருவரின் அலைபேசி மூலமாக எனக்கு தொடர்பு கொண்டு நடந்ததை கூறினார். இதுகுறித்து கேட்பதற்காக நான் கடந்த 18 - 1 -19 அன்று பானுப்பிரியா வீட்டிற்கு சென்றேன். வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் உன்னால் ஒன்றும் செய்ய,முடியாது .. எங்களிடம் பணமும் செல்வாக்கும் உள்ளது என்று கூறி என் கழுத்தைப் பிடித்து கேட்டுக்கு வெளியே தள்ளிவிட்டனர்.

எனவே இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். பிரபாவதியின் ( சந்தியாவின் அம்மா) புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீஸார் பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து போலீஸார் இவ்விவகாரம் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
 இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் தொடர்ந்து விசாரித்ததில் 14 வயதில் வீட்டில் வேலை செய்ய வைத்து கொடுமைப்படுத்தியது உறுதியானது.
அதன் பின்னர் குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் பானுப்பிரியா மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு குழந்தைகள் நலகுழு விசாரணைக்குப் பின் பரிந்துரை செய்தனர். அத்துடன் 14 வயது சிறுமையை பணிக்குச் செல்லத்தூண்டியதாக சிறுமியின் அம்மா பிரபாவதியை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக