திங்கள், 7 ஜனவரி, 2019

நடிகை பிரியங்கா :அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டதால் கணவரை பிரிந்தேன்: ( வெயில் பட நடிகை)

திருமணம்
சினிமா Siva Oneindia Tamil : திருவனந்தபுரம்: கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை நடிகை ப்ரியங்கா தற்போது தெரிவித்துள்ளார்.
வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் நடிகையானவர் ப்ரியங்கா. கேரளாவை சேர்ந்த அவர் தொ(ல்)லை பேசி, திருத்தம், செங்காத்து பூமியிலே, வானம் பார்த்த சீமையிலே, தீயோர்க்கு அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இது தவிர அவர் மலையாள படங்கள், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். ப்ரியங்காவும், இயக்குனர் லாரன்ஸ் ராமும் காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சென்னையில் வசித்து வந்த ப்ரியங்கா பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு சென்றவர் திரும்பி வரவே இல்லை. இதற்கிடையே விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றார்.
 2015ம் ஆண்டு ப்ரியங்கா விவாகரத்து கோரினார். லாரன்ஸ் ராம் தனது சமூக வலைதள பக்கங்களை தவறாக பயன்படுத்தியதாகவும் ஒரு வழக்கு தொடர்ந்தார். ப்ரியங்கா தனது மகன் முகுந்த் ராமுடன் வாமனாபுரத்தில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய அவர் மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டார்.



விவாகரத்து பிசி

மலையாள படங்களில் அவர் பிசியாகிவிட்டார். காதல் கணவரை பிரிந்ததற்கான காரணத்தை ப்ரியங்கா தற்போது தெரிவித்துள்ளார். லாரன்ஸ் தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டாராம். மேலும் ப்ரியங்காவை படங்களில் நடிக்கவும் தடை விதித்தாராம். இந்த காரணங்களுக்காக தான் ப்ரியங்கா லாரன்ஸ் ராமை பிரிந்தாராம்.




சினிமா

எனக்கு நடிக்க மட்டும் தான் தெரியும். தெரிந்த விஷயத்தை செய்யக் கூடாது என்று லாரன்ஸ் கூறியது எனக்கு பிடிக்கவில்லை என்று ப்ரியங்கா தெரிவித்துள்ளார். மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை லாரன்ஸ் வெளியிட்டது குறித்து அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக