செவ்வாய், 1 ஜனவரி, 2019

நக்கீரன் கோபால் குறித்து மோசமான வதந்திகள்? சங்கிகள் மிக மிக கேவலமான நடவடிக்கைகளில்?

Shankar A : அண்ணன் நக்கீரன் கோபால் குடும்பம் குறித்து மோசமான
வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திகளை முன்னின்று பரப்புபவர்கள், டவுசர் சங்கிகள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
தேர்தல் நெருங்க நெருங்க சங்கிகள் பதற்றத்தில், என்ன செய்வதென்று தெரியாமல், மிக மிக கேவலமான நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள்.
அதே நேரத்தில் இதைப் போன்ற வதந்திகளையெல்லாம் நக்கீரன் பல முறை செய்தியாக்கியுள்ளது என்பதையிம் நாம் மறுக்க முடியாது. ஒரு மோசமான வதந்தியின் வலி என்ன என்பதை அன்பு அண்ணன் கோபால் உணர்ந்திருப்பார் என நம்புகிறேன். இதன் அடிப்படையில், அவரின் இதழியல் செழுமியங்களை மேம்படுத்துவார் என்றும் நம்புகிறேன்.
நக்கீரன் கோபால் மற்றும் அவர் குடும்பம் குறித்த அனைத்து செய்திகளும் முழு பொய் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக