திங்கள், 14 ஜனவரி, 2019

கொடநாடு விவகாரம்: கைதான இருவரும் தனிப்படை போலீசாரால் சென்னை அழைத்து வரப்பட்டனர்

தினதந்தி :கொடநாடு விவகாரத்தில் கைதான சயான், மனோஜ் ஆகியோர் தனிப்படை போலீசாரால் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை, கொடநாடு விவகாரம் குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோவில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரையும் தமிழகத்தில் இருந்து டெல்லி சென்ற தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் டெல்லியில் கைது செய்த சயான், மனோஜ் ஆகியோரை சென்னை தனிப்படை போலீசார் விமானம் மூலம் இன்று சென்னை அழைத்து வந்தனர். பின்னர் நீதிபதி முன்னர் ஆஜர் படுத்துவதற்காக போலீஸ் வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக