சனி, 26 ஜனவரி, 2019

ஸ்டாலின் ரத்தன் டாட்டா சந்திப்பு

ரத்தன் டாடா- ஸ்டாலின் சந்திப்பு!மின்னம்பலம் : திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று ஜனவரி 25 ஆம் தேதி, அவரது சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் தொழிலதிபர் ரத்தன் டாடா சந்தித்துப் பேசினார். டாடா குழும முன்னாள் தலைவரான ரத்தன் டாடாவுடன் அக்குழுமத்தின் தற்போதைய தலைவருமான சந்திரசேகரும் இருந்தார்.
அரைமணி நேரம் நீண்ட இந்த சந்திப்பில் இன்றைய இந்தியாவின் தொழில் நிலவரம் பற்றி ஸ்டாலினிடம் டாடா பேசியதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தால் நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என்றும், அண்மையில் சென்னையில் நடந்து முடிந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் நோக்கம் எட்டப்பட்டிருக்கிறதா என்றும் இந்த சந்திப்பில் பேசப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் திமுக சீனியர்கள்.

இதுபற்றி மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பதிவில், “இன்று டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பத்ம விபூஷன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று தொழில் துறையில் அனைவருக்கும் முன்னோடியாக விளங்கும் திரு ரத்தன் டாடா அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக