ஞாயிறு, 27 ஜனவரி, 2019

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி ... கூட்டம் சேர்க்க பட்ட பாடு .. ஆனாலும்.. முடியல்லை ..


tamilthehindu :மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிகளில சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பகல் 11.15 மணியளவில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது. விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் நட்டா, பியூஸ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ மற்றும் சுகாதார திட்டங்களை பட்டியலிட்டார். பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிகளில சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். அத்துடன் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளிட்ட திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவை தொடர்ந்து, அதே மைதானத்தில் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றொரு மேடைக்கு நரேந்திர மோடி சென்று, பாஜக பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்

Chozha Rajan : மோடியை விரட்டியடித்த
தமிழ்நாடு...!
விமான நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் ஒரு மைதானத்தை தேர்வு செய்து, மீட்டிங் ஏற்பாடு செய்தார்கள். கூட்டத்திற்கு அதிமுகவினரையும் அழைத்துவரும்படி கேட்டிருக்கிறார்கள். ஆனால், அதிமுகவினரை அழைத்துவந்து பாஜக கூட்டமாக காட்ட அந்தக் கட்சியின் தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லையாம். பாஜகவின் தமிழ்நாடு லெட்சணத்தை மோடியே நேரடியாக பார்த்துச் செல்லட்டும் என்று அதிமுக தலைவர்கள் விட்டுவிட்டார்களாம்.
எனவே, மிகவும் சிரமப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள வடநாட்டு ஆட்களையும், கொஞ்சம் சவுராஸ்டிரா ஆட்களையும் சேர்த்து 3 ஆயிரம் சேர்களில் நிரப்பியிருக்கிறார்கள். கூட்டத்திற்குள் அனுமதிப்பதற்கு முன்பாக அவர்களிடம் கருப்புக்கொடி ஏதாச்சும் இருக்கிறதா என்று செக்கப் செய்து அனுப்பியிருக்கிறார்கள்.
கூட்டத்திற்காக போட்ட சேர்களில் அப்போதும் முழுக்க ஆட்களை நிரப்பமுடியவில்லையாம். எனவேதான், மோடியின் நிகழ்ச்சியை கவர் செய்ய வந்திருந்து மீடியாக்களின் கேமராக்களை கூட்டத்தை நோக்கி திருப்ப வேண்டாம் என்று கூறிவிட்டார்களாம். இது தொலைக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு நன்றாக புரிந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக