செவ்வாய், 15 ஜனவரி, 2019

ராகுலை துபாய் சிறுமி கேள்வி கேட்டதாக பொய்யான வீடியோ வெளிட்ட வெட்கம் கெட்ட பாஜக..

ஆலஞ்சியார் : தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம்
புத்திபேதலித்ததைப்போல பேசவைக்கிறது
தான் வகிக்கிற பதவியின் கௌரவம் தெரியாமல் மூன்றாம்தர அரசியல் செய்கிறார் மாண்பிமை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
காங்கிரஸ் தலைவர்கள் மோடி அரசினை நீக்குவதற்கு பாகிஸ்தானிடம் உதவி கேட்டு கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்கள் என்கிறார் ..
இவ்வளவு பெரிய பொய்யை நிர்மலா சீதாராமன் எந்த அடிப்படையில் இவ்வளவு பெரிய பதவியில் இருந்து கொண்டு நாவு கூசாமல் எந்த விதத்திலும் எந்த வித ஆதாரமும் இல்லாமல் கூற முடிகிறது என்பதை எம்மால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை பொய் சொல்வது அரசியல்வாதிகளுக்கு பழகியதுதான் ஆனால் பொய் மட்டுமே மூலதனமாக செயல்படுகிற கட்சி பாஜகதான் ..
அதற்காக கொஞ்சம் கூட வெட்கபடுவதில்லை
ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில்
இதே விதமான ஒரு குற்றச்சாட்டுகளை பிரதமர் வேட்பாளராக இருந்த
மோடி தேர்தலில் பிரச்சாரத்தில் சொன்னார் அதுவும் மன்மோகன் சிங் மீதே குற்றம் சாட்டினார் கடைசியில் பொய் சொன்னதாக நிரூபணமானது இவ்வளவு கீழ்த்தரமான கேவலமான அரசியலை பாஜக செய்து கொண்டு ...ஆனால் காங்கிரஸ் கட்சி மீதே குற்றச்சாட்டுகளை கூறுவது நகைப்பிற்குரிய மட்டுமல்ல இழிசெயலும் கூட..


..
துபாயில் ராகுல் மூன்று இடங்களில் பேசினார் ..
பாஜக IT Link .. ராகுல் ஒரு சிறுமி கேள்வி கேட்டதாகவும் பதில் சொல்லமுடியாமல் தவித்ததாகவும் உடனே நேரலை நிறுத்திவிட்டதாகவும் கதை சொன்னது .. அதை தினமலர் தினகரன் போன்ற பத்திரிக்கைகள் செய்தியாக்கின உண்மை என்னவென்று ஆராயாமல் கடைசியில் அசிங்கப்பட்டன.. ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டுமா என காங்கிரஸ் மௌனம் காத்தது பைத்தியங்களின் உளறலும் பதில் சொல்ல தேவையில்லையென அமைதிகாத்தது .. கடந்த முறை பொய்களை மட்டுமே மூலதனமாக்கி வென்றவர்கள் இப்போது எதை சொன்னாலும் மக்கள் நொடிக்குள் திருப்பிதாக்குகிறார்கள் .. குஜராத்போல இந்தியாவை ஆக்குவேன் என்றபோது ஆஹா என புகழ்ந்தவர்கள் கடைசியில் குஜராத்தே சந்திசிரித்ததை அறிந்தோம்..
..
நாடிடில் ஊழலை ஒழித்துவிட்டதால் எதிர்கட்சிகள் என் மீது கோபத்தில் உள்ளனர் என்கிறார் பிரதமர் மோடி .. நல்ல நகைச்சுவை
ரஃபேல் விமான ஊழல் அது வேறங்க.. நாசுக்கா திருட்டுத்தனம் பண்ணுன்னா தப்பே இல்லைங்க.. ? அப்படிதானே..
பொய் நின்று கொல்லும் என்பதை அறியாது
மேலும் மேலும் பொய்யாலேயே அரசை நடத்தலாமென எண்ணுகிறார் .. மக்கள் இந்த அரசின் மீது கடுங்கோபத்தில் இருப்பது அறியாமல் .. இந்த முறை போட்டாஷாப் .. பொய்பிரச்சாரம் ஊடகங்களின் ஜால்ரா கைகொடுக்காது .. காரணம் எல்லாருடைய கைகளிலும் இணைய இணைப்பு இருக்கிறது நிமிடத்திற்குள் சொல்வது பொய்யா மெய்யா என அறுந்துக்கொள்ளும் வசதி வந்துவிட்டது அதோடு விழிப்புணர்வும் ..
..
மோடியின் பாஜகவின் ஆர்எஸ்ஸின் முகமூடி கிழிய தொடங்கியிருக்கிறது .. இந்த அரசு
மக்களுக்கான அரசல்ல கார்ப்பரேட்களுக்கான..பெரும்பணக்காரர்களுக்கான பார்பனர்களுக்கான அரசென்பதை மக்கள் உணர்ந்து தெளிந்திருக்கிறார்கள் .. பாஜகவை வீழ்ந்த தயாராகிவிட்டார்கள்..
பாசிசம் வீழும்..
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக