புதன், 16 ஜனவரி, 2019

10% இட ஒதுக்கீட்டை ஆதரித்த கம்யுனிஸ்ட் டி கே ரெங்கராஜன் ஜெயலலிதாவை போலவே வைஷ்ணவ அய்யங்கார்

2010 ஆம் ஆண்டு சிபிஎம் கட்சிக்குள் அடுத்த தலைவராக வந்திருக்க வேண்டிய உ ரா வரதராஜன் மீது அபாண்டமாக பழிசுமத்தி அவரை கட்சியில் இருந்து
அவசர அவசரமாக நீக்கி அவர் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமாய் கண்டெடுக்கப்பட்டது, 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி மீண்டும் உருவாக உதவும் வகையில் மநகூவை உருவாக்கியது என அனைத்திலும் திருவரங்கத்து திருவாளரின் திருக்கைங்கர்யம் ரெங்கநாயகியின் சேவையை சிறப்பாகவே செய்தது
LR Jagadheesan : பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்து வாக்களித்த டி கே ரெங்கராஜனை அவர் பிறந்த ஜாதிய பின்புலத்தை வைத்து விமர்சிப்பது தவறு. அவர் ஜாதிகடந்த கம்யூனிஸ்ட் என்பதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இதைக்கண்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. < இந்த வாதத்தின் முதல்பாதி ஏற்புடையது. அதாவது யாரையும் ஒருவர் பிறந்த ஜாதியை மட்டுமே வைத்து விமர்சிப்பது தவறு தான். நம் யாருடைய பிறப்பும் நம் தேர்வல்ல. இயற்கையின் தேர்வு. எனவே அது மட்டுமே ஆதரவு அல்லது ாக கொள்ளக்கூடாது.
விமர்சனத்துக்கான ஒற்றை அளவுகோள
ஆனால் நம் பொதுவெளி சமூக செயல்பாடுகள் நம் ஜாதி நலனை, நம் வர்க்க நலனை மட்டும் பாதுகாப்பதற்கானதாக இருந்தால் நம் ஜாதிய/வர்க்க நலன்களை மட்டுமே முன்னெடுப்பதாக இருந்தால் அப்போது நாம்
சுயஜாதி/வர்க்க நலன் பாதுகாவலர்களாகத்தான் செயல்படுகிறோம்.
தெரிந்தோ தெரியாமலோ. விரும்பியோ விரும்பாமலோ. எனவே நாம் பிறந்த ஜாதி/வர்க்கம் விமர்சனப்பொருளாவது தவிர்க்க முடியாது. எனக்கும் உங்களுக்கும்.
அப்படிப்பார்த்தால் ரெங்கராஜனின் சமீபத்திய அரசியல் செயற்பாடுகள் நூல்பிடித்தாற்போல் நேர்கோட்டில் பயணம் செய்திருக்கிறது.
2001, 2011 சட்டமன்றத்தேர்தல்களில் அதிமுகவுடன் சிபிஎம் கட்சி கூட்டணி அமைத்தது முதல் இடையில் 2010 ஆம் ஆண்டு சிபிஎம் கட்சிக்குள் அடுத்த தலைவராக வந்திருக்கவேண்டிய உ ரா வரதராஜன் மீது அபாண்டமாக பழிசுமத்தி அவரை கட்சியில் இருந்து அவசர அவசரமாக நீக்கி அவர் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமாய் கண்டெடுக்கப்பட்டது, 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி மீண்டும் உருவாக உதவும் வகையில் மநகூவை உருவாக்கியது என அனைத்திலும் திருவரங்கத்து திருவாளரின் திருக்கைங்கர்யம் ரெங்கநாயகியின் சேவையை சிறப்பாகவே செய்தது என்பதே சமீபத்திய வரலாறு.
அதற்கான பிரதிபலனாக அவர் இரண்டாவது முறை ராஜ்யசபா உறுப்பினராக தொடர்வதற்கு ஜெயலலிதா ஆதரவளித்த விதமும் பின்னணியும் மிக முக்கியம்.
அதிமுக கூட்டணியில் இருந்த சிபிஐ கட்சியைச்சேர்ந்த டி ராஜா இரண்டாம் முறை (2013) ராஜ்யசபா உறுப்பினராக தேர்வாக அதிமுகவின் ஆதரவைக்கேட்டு ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட வாசலில் தவமாய் தவமிருந்தார்.
டி ராஜா மட்டுமல்ல, சிபிஐ கட்சியின் அகில இந்திய தலைமையும் சென்னைக்கு பறந்து வந்து போயஸ் தோட்ட பெருமாட்டியின் தரிசனம் வேண்டி காத்துக்கிடந்தனர். அரசியல் தரகர் சோவின் தயவு கூட வேண்டப்பட்டது. ஆனால் ஜெயலலிதா சந்திக்க மறுத்து அலைக்கழித்து அவமதித்து டி ராஜாவுக்கு தண்ணி காட்டினார். ஜெயலலிதா டில்லிக்குப்போனபோது அவரைத்தொடர்ந்து இவர்களும் ஓடினர். இப்படியான தொடர் அவமானங்களுக்குப்பின் பிச்சை போடுவதைப்போல டி ராஜாவுக்கு கட்டக்கடைசியில் ஆதரவு தந்தார் “கருணைத்தாய்”.
ஆனால் 2014இல் டி கே ரங்கராஜன் இரண்டாம் முறை ராஜ்யசபா உறுப்பினரானபோது யாருக்கும் எளிதில் திறக்காத கொடநாட்டு கதவுகள் சிபிஎம் தலைவர்களுக்கு வேகவேகமாய் திறந்தன. அதைவிட வேகமாக டி கே ரங்கராஜன் தேர்வாக அதிமுக தன் ஆதரவை அறிவித்தது.
சிபிஐ கட்சியின் டி ராஜாவுக்கு நடந்த பொதுவெளி அவமானங்கள் எவையும் சிபிஎம் கட்சியின் டி கே ரெங்கராஜனுக்கு நடக்கவில்லை. அதற்கு ஜெயலலிதா, டி கே ரெங்கராஜன் மற்றும் டி ராஜா ஆகியோரின் ஜாதிகள் காரணமல்ல என்று வெள்ளந்தியாக நம்புவோர் நம்பலாம். எல்லோரும் அதை ஏற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.
தன்னை எதிர்ப்பவர்கள் இழிகுலத்தை சேர்ந்தவர்கள் என்கிற டுவீட்டை பகிரும் அளவுக்குத்தான் ரெங்கராஜனின் கம்யூனிஸ சித்தாந்த தெளிவு இருக்கிறது என்பது கூடுதல் கொசுறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக