ஞாயிறு, 20 ஜனவரி, 2019

கும்மிடிபூண்டி 3 பாலிடெக்னிக் மாணவர்கள் ஓட ஓட வெட்டி கொலை ..8 பேர் கும்பல்


வெப்துனியா : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே ம.பொ.சி நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 17). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய நண்பர்கள் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை சேர்ந்த விமல் (23), சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சதீஷ் (24). ஆகாஷ், விமல், சதீஷ் ஆகியோர் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 8 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், திடீரென ஆகாஷ் உள்பட 3 பேரையும் சரமாரியாக வெட்டினார்கள்.
இதனால் உயிருக்கு பயந்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து வெட்டுக்காயங்களுடன் தப்பி ஓடினார்கள். ஆனாலும் அந்த கும்பல் விரட்டி சென்று 3 பேரையும் கொடூரமாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டது. இது பற்றி அறிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் ஆகாஷ் உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக