சனி, 15 டிசம்பர், 2018

கோதண்ட ராமர் சிலை .வீடு, கடைகளை இடித்து கொண்டு செல்கிறது .. மக்கள் போராட்டம்

அலறி ஓடினர் tamil.oneindia.com hemavandhana.: வழியெல்லாம் வீடு, கடைகளை இடித்து கொண்டு செல்லும் கோதண்டராமர்-வீடியோ திண்டிவனம்: வந்தவாசி பக்கம் வீடுகளில் டம்...டம்.. சத்தம்தான் காதை பிளக்கிறது!!
பெங்களூர் ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒரே கல்லில் ஆன சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலையும், 7 தலை பாம்புடன் கூடிய ஆதிசேஷன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்கலாம் என கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இதை செதுக்க ஒரே கல்லிலான பாறை தேவைப்பட்டது. இந்த பாறை வந்தவாசி அருகே இருக்கிற கொரக்கோட்டை கிராமத்தில் இருப்பதை அறிந்து 66 அடி நீளம், 26 அடி அகலம் கொண்ட ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான மகாவிஷ்ணு சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது.



அலறி ஓடினர்

இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. கிளம்பும்போதே ஏகப்பட்ட பிரச்சனைகள். வெயிட் தாங்காமல் டயர் மண் சாலையில் சிக்கி கொண்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் லாரியின் 6 டயர்கள் டமார் டமார் வெடித்து சிதறியது. இதனால் ரோட்டில் சென்று கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.


கடைகளை இடித்தது

கடைகளை இடித்தது

ஒருவழியாக வெடித்த டயர்கள் எல்லாம் சரி செய்யப்பட்டு மீண்டும் லாரி கிளம்பியது. நேற்று திண்டிவனம் அருகே உள்ள வெள்ளிமேடுப்பேட்டை அருகே வந்தபோது, சாலையின் இருபுறங்களிலும் இருந்த கடைகளை இடித்து சென்றன.
முற்றுகை



முற்றுகை

மேலும் வீடுகளும் இடியும் சூழ்நிலை உருவானது. மற்றொரு பக்கம் கரண்ட் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. கடைகளும், வீடுகளும் விழுந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். எல்லோரும் சேர்ந்து வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர்.


இழப்பீடு

இழப்பீடு

கடைகளும் போச்சு, வீடுகளும் போச்சு, எங்களுக்கு உரிய இழப்பீடு வேண்டும் என்று கேட்டு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் இறங்கினார்கள். பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி தந்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.



4 மணி நேரம் பாதிப்பு 4 மணி நேரம் பாதிப்பு

அதன்பின்னரே சிலை அங்கிருந்து நகர ஆரம்பித்தது. இந்த போராட்டம் காரணமாக கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் வாகனங்களும் வேறு பாதையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக