செவ்வாய், 25 டிசம்பர், 2018

சேவல் பிறப்பைத் தடுக்க புதிய வழிமுறை!.. அப்படியே ஆண்கள் பிறப்பதையும் ...???

சேவல் பிறப்பைத் தடுக்க புதிய வழிமுறை!மின்னம்பலம் : அடைகாத்தலுக்குப் பிறகு சேவல் பிறப்பதைத் தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட முட்டைகள், உலகில் முதன்முறையாக ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லினில் விற்பனைக்கு வந்துள்ளது.
"செலெஃக்ட்" செயல்முறை மூலம் பறவையின் பாலினத்தை முன்பே தீர்மானிக்க முடியும் என்றும், சேவல்கள் பிறப்பதைத் தவிர்க்க முடியும் என்றும் கண்டுபிடித்துள்ளனர் ஜெர்மனியிலுள்ள விஞ்ஞானிகள்.
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 4 முதல் 6 மில்லியன் சேவல்கள் கொல்லப்படுகின்றன. சேவல்களினால் எந்தவிதப் பொருளாதார லாபமும் இல்லை என்ற காரணத்தால், இவ்வாறு நிகழ்கிறது. அதனால், சேவல் பிறப்பதைத் தவிர்க்க ஜெர்மனி விஞ்ஞானிகள் புதிய செயல்முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். செலெஃக்ட் என்ற முறையின் மூலம் கோழி கருவுற்ற 9 நாட்களில், அதன் பாலினத்தைக் கண்டறிந்து மாற்ற முடியும்.

இது குறித்து செலெஃக்ட் முறையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் லட்ஜர் ப்ருலோ கூறுகையில், “முட்டையிலேயே ஒரு குஞ்சின் பாலினத்தைத் தீர்மானிக்க முடிந்தால், ஆண் குஞ்சுகள் பிறப்பதைத் தவிர்க்க முடியும். இந்த செயலில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல. அனைவருக்கும் ஒரே நோக்கம்தான். அது சேவல்கள் கொலை செய்யப்படுவதை நிறுத்துவதுதான். அதற்காகத் தான் இந்த முயற்சி.
முட்டையிடாமல் இருத்தல் மற்றும் வேகமாக வளராமை போன்ற காரணங்களுக்காகச் சேவல்கள் கொல்லப்படுகின்றன. இதைத் தடுக்கும் வகையில், லைப்சிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அல்முத் ஐன்ஸ்பேனியர் ஒரு வேதியியல் அளவுகோல் ஒன்றை உருவாக்கினார். இது கர்ப்பப் பரிசோதனையைப் போலவே இருக்கும். இதன்மூலம், பெண் முட்டைகளில் அதிகளவு உள்ள ஹார்மோனை கண்டறிய முடியும். ஒன்பது நாட்களில் கருவுற்றமுட்டையுடன் குறிப்பிட்ட திரவத்தைச் சேர்க்கும்போது, குஞ்சு பெண்ணாக இருந்தால் வேதியியல் அளவுகோலில் வெள்ளையாகவும், ஆணாக இருந்தால் நீல நிறமாகவும் மாறும்.
இதையடுத்து, குஞ்சு பொறிப்பகங்களில் இந்த சோதனையை எளிதாக மேற்கொள்ள இயந்திரம் உருவாக்கப்பட்டது. இந்த முறை நன்றாகவே வேலை செய்வதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜெர்மனியில் ஆண் குஞ்சுகள் இல்லாத முட்டைகளை இடுகின்றன பெண் கோழிகள். கடந்த மாதம் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் செலெஃக்ட் என்ற பெயர் பதித்த முட்டைகள் விற்பனைக்கு வந்தன” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக