ஞாயிறு, 16 டிசம்பர், 2018

நிலத்தடி நீருக்கும் வரி மத்திய அரசு புது அறிவிப்பு .. திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

tamlthehindu : சென்னை: பாமக நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: நிலத்தில் இருந்து விவசாயம் தவிர்த்த பிற பயன்பாடுகளுக்காக எடுக்கப்படும் தண்ணீருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு  அறிவித்திருக்கிறது. நிலத்தடி நீர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன் இந்த கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் கட்டண முறை நடைமுறைக்கு வருவதாகவும் மத்திய அரசின் மத்திய நிலத்தடி நீர்  ஆணையம் அறிவித்திருக்கிறது. நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பது என்பது 1987ம் ஆண்டில் உருவாக்கப்பட்டு 2012ம் ஆண்டில் திருத்தப்பட்ட தேசிய தண்ணீர் கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். பாமக  உள்ளிட்ட சில கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் தண்ணீர் கொள்கையை மத்திய அரசு இறுதி செய்தது.


நிலத்தடி நீரை நிர்வகிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்படும் போது, 90 சதவீதம் நிலத்தடி நீர் இலவசமாக பயன்படுத்தப்படுவதை தனியார் நிறுவனங்கள் அனுமதிக்காது. அப்போது நிச்சயமாக வேளாண் பயன்பாட்டுக்கான  தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் ஆபத்தை இப்போதே தடுக்க வேண்டும். எனவே, குடிநீர் உள்ளிட்ட வீட்டு பயன்பாடு, வேளாண் பயன்பாடு ஆகியவற்றுக்கான நிலத்தடி நீருக்கு  எக்காலத்திலும், எந்த பெயரிலும் கட்டணம் வசூலிக்கப்படாது என அரசு உறுதியளிக்க வேண்டும். 2012ம் ஆண்டின் தேசிய தண்ணீர் கொள்கையில் இந்த வாக்குறுதியை அரசு சேர்க்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக