வெள்ளி, 21 டிசம்பர், 2018

காணமல் போன குட்கா ஆவணம் ஜெயலலிதா வீட்டில் எப்படி வந்தது? சசிகலாவிடம் உயர்நீதிமன்றம் ...

THE HINDU TAMIL : குட்கா முறைகேடு தொடர்பாக வருமானவரித் துறை ஆவணங்கள் போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக வி.கே.சசிகலா பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கதிரேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழக டிஜிபி டி.கே.ராஜேந் திரன், அவர் மீதான குட்கா முறை கேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து பதவி நீ்ட் டிப்பு பெற்றுள்ளார். டி.கே.ராஜேந் திரனுக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் குட்கா முறைகேடு தொடர்பான வருமானவரித் துறை கடிதம் கிடைக்கவில்லை என தலைமைச் செயலர் தெரிவித்தார்.

மறைக்கப்பட்ட குட்கா முறை கேடு தொடர்பான ஆவணங்கள் 2017-ல் நவம்பரில் வருமான வரித் துறையினர், முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள வி.கே.சசிகலாவின் அறையில் கைப்பற்றினர். ராஜேந்திரனுக் காகவே குட்கா முறைகேடு ஆவ ணங்கள் மறைக்கப்பட்டுள்ளன. எனவே, டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பு சட்டவிரோதம் என அறிவித்து புதிய டிஜிபியை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன் வாதிடும்போது, குட்கா முறைகேடு தொடர்பாக காணாமல் போனதாக கூறப்பட்ட வருமான வரித் துறை ஆவணங்கள், அரசில் எந்த பொறுப்பிலும், பதவியி லும் இல்லாத வி.கே.சசிகலா வின் அறையிலிருந்து எடுக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக வருமான வரி புலனாய்வுத்துறை இயக்குநர் அறிக்கை அளித்துள்ளார் என்றார்.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகள், வி.கே.சசிகலா, முன் னாள் தலைமைச் செயலர் ஆகி யோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 2-ம் தேதிக்கு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக