வெள்ளி, 21 டிசம்பர், 2018

பாஜகவின் போக்ரான் அணுக்குண்டு தொகுதியில் சாமியாரை வீழ்த்திய காங்கிரஸ் இஸ்லாமியர்

Sadhu Sadhath : போக்ரான் மோடிக்கு போட்ட குண்டு ...  

pokhran-neta-BCCL
Saleh Mohammad - Mahant Pratap Puri,
போக்ரான் நமக்கு அணு குண்டு சோதனை நடத்தும் இடமாக தான் தெரியும் ... ராஜஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலில் இதே போக்ரானில் பிஜேபிக்கு மிகப் பெரிய குண்டு போட்டிருக்கிறார்கள் அந்த தொகுதி வாக்காளர்கள் ...
யோகி ஆதிநாத்தின் கோரக்பூர் மடத்தில் பொருப்பில் இருப்பவர் பூரி எனும் சாமியார் .. இவருடைய சொந்த ஊர் போக்ரான்.. அங்கு பிரபலமான சாமியாரும் கூட அதனாலேயே இவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டது .. இந்த தொகுதியில் 89% இந்துக்கள் 11% முஸ்லீம்கள் வாழ்கிறார்கள் ... காங்கிரஸ் சார்பில் முகம்மது சலாஹ் நிற்க்க வைக்கப்பட்டார்
யோகி இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்யும் போது தான் பல பல பட்டாசுகள் ராகுலுக்கு எதிராக வெடிக்கப்பட்டது .. குறிப்பாக ராகுல் எந்த சாதி ? எந்த கோத்திரம் ? என்று கேட்க அதுவே பெரிய விவாதப் பொருளானது ... அடுத்து காங்கிரஸ் வேட்பாளரை அட்டாக் செய்ய .. அலியா இல்லை பஜ்ரங்பலியா என்று பார்ப்போம் என மதவெறியை கிளப்பினார் .. அது அந்த மாநிலம் முழுதும் எதிரொளித்தது ...

இத்தனைக்கும் போக்ரான் பாகிஸ்தானிலிருந்து 200 கிமீ தூரத்தில் தான் இருக்கிறது .. அதையும் குறிப்பிட்டு காங்கிரஸ் வேட்பாளர் பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பவர் என்றெல்லாம் பட்டாசாய் வெடித்தார்கள் ...
கடைசியில் 89% இந்துக்கள் அமைதியாக வேடிக்கைப் பார்த்துவிட்டு முகம்மது சலாஹ் வை தேர்ந்தெடுத்து மிகப் பெரிய குண்டைத் தூக்கி போட்டிருக்கிறார்கள் பிஜேபிக்கு எதிராக ... அந்த குண்டு பிஜேபியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது ...
இந்த குண்டு வெடிப்பை தேசிய ஊடகங்களில் விவாதம் ஆகாமல் அப்படியே மூடி மறைக்கும் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள் .. இது மற்ற இடங்களில் உள்ளவர்களுக்கு எந்த வித சிந்தனையையும் ஏற்படுத்திடக் கூடாது என்பதற்க்காக ....
மதவெறி மாயட்டும் .. மனித நேயம் வாழட்டும் .
 

INC8296448.22%Shale MohammadWon
BJP8209247.71%Pratappuri
IND27481.60%Paramaram
BSP21871.27%Tulchharam
NOTA11220.65%Nota
IND9560.56%Pukhraj

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக