ஞாயிறு, 23 டிசம்பர், 2018

திராவிடத்தின் மீது வஞ்சக தாக்குதல்? திருச்சி கருஞ்சட்டை பேரணி .... எந்த இடத்திலும் திராவிடம் இல்லை!

திராவிட கோட்ப்பாட்டை எப்பாடு பட்டாவது உடைந்து எறியவேண்டும் என்ற சுப்பிரமணியம் சுவாமி போன்றோரின் ஆரிய விருப்பங்களை ஈடேற்ற திருமுருகன் காந்தி வகையறாக்கள் ஏற்பாடு செய்யும் பேரணி இது.
இவரகளின் கருஞ்சட்டை பேரணி என்பது ஒரு கருங்காலிகளின் பேரணி ..
பெரியார் பேரை கூறிக்கொண்டே பெரியாரின் திராவிட வரலாற்று மீட்சியை குழிதோண்டி புதைக்கும் நிகழ்ச்சி நிரல் இது!
ஏன் தெரியுமா?
திராவிடம் என்றால் அங்கே ஜாதி இல்லை.
திராவிடம் என்றால் அங்கே மதம் இல்லை
திராவிடம் என்றால் அங்கே மூட நம்பிக்கை இல்லை
சுய ஜாதி அபிமானம் சுய ஜாதிவெறி உள்ளவர்களுக்கு திராவிடம் என்றால் கசப்பாகவே இருக்கும்.!
இந்த சுய ஜாதி பற்றாளர்கள் இன்னும் உணராத விடயம் .. பார்ப்பனுக்கும் ஆரியனுக்கும் அத்தனை ஜாதிகளும் கீழ் ஜாதிதான் .. அவன் மட்டுமே உயர் ஜாதி!
இது புரியாத கூட்டம் ஜாதிவெறியும் மதவெறியும் நிரம்பி திராவிடத்திற்கு எதிராக ஒரு பேரணி! கோடரி காம்புகளின் அணி!

viduthalai.arasu : 2018 – திசம்பர் 23 அன்று திருச்சி – உழவர் திடலில்
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் கருஞ்சட்டைப் பேரணியில் எழுப்பப்பட வேண்டிய முழக்கங்கள்:
(இவைதவிர பிற முழக்கங்களிட வேண்டாமென ஒருங்கிணைப்புக்குழு கேட்டுக்கொள்கிறது)
• வீரவணக்கம் வீரவணக்கம்!
பார்ப்பனியத்தைத் தகர்தெறிய
தமிழர் மானம் காக்க களமாடிய
தமிழர் தந்தை பெரியாருக்கு

வீரவணக்கம் வீரவணக்கம்!
• வெல்லட்டும் வெல்லட்டும்!
தமிழர் உரிமை மீட்டெடுக்க
பெரியாரின் நினைவை ஏந்தும்
கருஞ்சட்டைப் பேரணி
தமிழின உரிமை மாநாடு
வெல்லட்டும் வெல்லட்டும்
• உறுதியேற்போம் உறுதியேற்போம்!
இந்தியத்திடம் இழந்துவிட்ட
உரிமைகளை மீட்டெடுக்க
உறுதியேற்போம் உறுதியேற்போம்!
பெரியாரை ஏந்தி நடக்கும்
கருஞ்சட்டை பேரணியில்
உறுதியேற்போம் உறுதியேற்போம்!
• மீட்டெடுப்போம் மீட்டெடுப்போம்!
பார்ப்பனியம் அழிக்கத் துடிக்கும்
தமிழர் பண்பாட்டை மீட்டெடுப்போம்!
• கருவறுப்போம் கருவறுப்போம்!
தமிழர்களை அழிக்கத் துடிக்கும்
காவி பயங்கரவாதத்தைக் கருவருப்போம்!
• விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்!
பாசிச பாஜக வை…
பயங்கரவாத RSS ஐ….
தமிழ்நாட்டை விட்டு விரட்டியடிப்போம்!
பெரியாரின் கைத்தடிகொண்டு…
பார்ப்பனியத்தை விரட்டியடிப்போம்!
• ஒன்றிணைவோம் ஒன்றிணைவோம்!
தமிழர் வளங்கக்க் கொள்ளையடிக்கும்
தமிழினத்தை அழிக்க துடிக்கும்
இந்தியப் பார்ப்பனக் கும்பலுக்கெதிரா
தமிழர்களாய் ஒன்றிணைவோம்!
• ஒழித்துக்கட்டுவோம் ஒழித்துக்கட்டுவோம்!
சாதிய பாகுபாட்டை ஒழித்துக்கட்டுவோம்!
கட்டியெழுப்புவோம் கட்டியெழுப்புவோம்!
சாதியற்ற தமிழ்த்தேசியத்த
மதவெறியற்ற பெரியார் மண்ணைக்
கட்டியெழுப்புவோம் கட்டியெழுப்புவோம்!
• ஒன்றிணைவோம் ஒன்றிணைவோம்!
ஆணவக்கொலைகளுக்கு எதிராக
பெரியார் வழியில் ஒன்றிணைவோம்!
• இடமில்லை இடமில்லை
தமிழர் விரோத காவிக் கும்பலுக்கு
பெரியார் மண்ணில் இடமில்லை!
தந்தை பெரியார் பிறந்த மண்ணில்
இந்துவெறி அரசே வெளியேறு!
தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!
• எங்கள் ஆயுதம் எங்கள் ஆயுதம்
பார்ப்பனியத்தை விரட்டியடிக்க
ஆதிகச் சாதிவெறியை ஒழிக்க
பெண்ணடிமைத்தனத்தை ஒழித்திட
அரசு அடக்குமுறைகளை எதிர்கொள்ள
எங்கள் ஆயுதம் எங்கள் ஆயுதம்
பெரியாரே எங்கள் ஆயுதம்!
• அடங்காது அடங்காது
பார்பனியவெறி மிரட்டலுக்குப்
பெரியார் மண் அடங்காது!
தமிழ்நாடு அடங்காது!
• இந்திய அரசே மோடி அரசே
பாசிச பாஜக வெறி அரசே
திருடாதே திருடாதே
தமிழ்நாட்டு வளங்களைத் திருடாதே
கொள்ளையடிக்காதே கொள்ளையடிக்காதே
தமிழர்சொத்துகளைகொள்ளையடிக்காதே!
• இனப்பகை பார்ப்பனிய அரசே
பாசிச மோடி அரசே
கொலை செய்யாதே கொலை செய்யாதே
தமிழர்களைக் கொலை செய்யாதே!
• நீதி வேண்டும் நீதி வேண்டும்
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில்
மோடி அரசின் படுகொலைக்கு
நீதி வேண்டும் நீதி வேண்டும்!
• பறக்காது பறக்காது
காவிக்கொடி பறக்காது!
கருஞ்சட்டைகள் களமாடும்
பெரியார் மண்ணாம் தமிழ்நாட்டில்
காவிக்கொடி பறக்காது!
• முழங்கிடுவோம் முழங்கிடுவோம்
பெரியார் முழங்கிய முழக்கங்களை
தமிழ்நாட்டு உரிமைகளை
இந்திய அரசு அதிர்ந்திட
முழங்கிடுவோம் முழங்கிடுவோம்!
• இந்திய மோடி பாசிச அரசே
பலிகொடுக்காதே பலிகொடுக்காதே
கார்பரேட்டுகள் லாபம் பார்க்க
மீத்தேன் எடுக்க நிலக்கரி எடுக்க
தமிழர்களை பலி கொடுக்காதே!
• தமிழ் நாட்டுக் கோயில்களில்
தமிழில்மட்டுமே வழிபாடு செய்வோம்!
அனைத்துச் சாதியினரையும்
அர்ச்சகர்களாக்குவோம்! அர்ச்சகர்களாக்குவோம்!
• அரசுத்துறைகளில், தனியார் துறைகளில்
கல்வித் துறையில், வேலைவாய்ப்பில்
அனைத்து நிலைகளிலும் சமூக நீதியை
நடைமுறைப்படுத்து! நடைமுறைப்படுத்து!
• பாலின வேறுபாட்டினை ஒழிக்க
பேணுவோம்! பேணுவோம்!
பெண்ணுரிமை பேணுவோம்!
• அகற்றிடு அகற்றிடு
ஆளைக்கொல்லும் அணு உலையை
பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை
மலை வளங்களை நாசமாக்கும்
நியூற்றினோ திட்டத்தை
கெயில் குழாய்த் திட்டத்தை
ஸ்டெர்லைட் ஆலையை
தமிழ்நாட்டிலிருந்து அகற்றிடு!
• இனப்பகை இந்திய அரசே!
தடுக்காதே தடுக்காதே
தமிழீழ விடுதலையைத் தடுக்காதே!
தடுக்காதே தடுக்காதே
ஏழு தமிழர் விடுதலையைத்
தடுக்காதே தடுக்காதே
மதித்திடு மதித்திடு
தமிழர் இறையான்மையை மதித்திடு!
• கட்டியெழுப்புவோம் கட்டியெழுப்புவொம்
தமிழர் இறையாண்மையைக் கட்டியெழுப்புவோம்
• தமிழர் விரோத இந்திய அரசே
தாரைவார்க்காதே தாரைவார்க்காதே
தமிழர் பெருங்கடலை தாரைவார்க்காதே
வல்லாதிக்க நாடுகளுக்குத்
தமிழர் பெருங்கடலைத் தாரைவார்க்காதே!
• உறுதியேற்போம் உறுதியேற்போம்!
இந்திய அடக்குமுறைகளை எதிர்கொள்ள
பார்ப்பனியத்தைக் கருவருக்க
மக்கள்விரோத சட்டங்களைக் கிழித்தெறிய
தனியார்மயத்தை எதிர்த்திட
தமிழீழ சுதந்திரம் மலர்ந்திட
அறிவாசான் பெரியார் நினைவையேந்தி
கருஞ்சட்டை பேரணியில்
உறுதியேற்போம் உறுதியேற்போம்!
• சாதிப் பெயர்களைத் தூக்கி எறியுங்கள்
• வடமொழிக் கலப்பை வலிமையாய்த் தவிர்ப்போம்!
• வேத,மனு கசடுகளைக் குப்பையில் வீசுங்கள்!
• தமிழர்கள் யாவரும்
ஓர் இனம்! ஒரு குலம்!
• கோயில் வழிபாட்டை த் தமிழில் செய்க!
• சாதியும் மதமும் வேதியர் புரட்டு!
• இந்தி திணிப்பை ஏற்கமாட்டோம்!
• வடக்குக் காற்று தமிழர்க்கு ஆகாது!
• வடக்குக் கதவினை இறுக்கிப் பூட்டுவோம்!
• ஆரியப் புராணங்களை அறவே மறுப்போம்!
• பாசிச பார்ப்பனியத்திற்குப் பாடை கட்டுவோம்!
• ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைப்போம்!
• தில்லி ஆட்சிக்கு எல்லை கட்டுவோம்!
• ஆளுநரின் அதிகாரங்களை அடியோடு மறுப்போம்!
• வேதாந்த நிறுவனத்தை வேரோடு விரட்டுவோம்!
• ரிலையன்ஸ் அம்பானி
டாடா பேட்டாக்களின்
கூட்டுக் கொள்ளைகளை
தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்!
• இந்தியக் கொள்ளையிலிருந்து நெய்வேலியை மீட்போம்!
சில நெறிமுறைகள்…
கருஞ்சட்டைப் பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு வந்து பங்கேற்றிருக்கிற அமைப்புகளை, இயக்கங்களைச் சார்ந்தவர்களும், அவ்வாறு அவற்றைச் சாராது
பங்கேற்க வந்திருக்கிற பெரும்பான்மைத் தோழர்களும் உயர்ந்த கொள்கைகளுக்காகவும், நோக்கங்களுக்குமானவர்கள் என்பதால் மிகவும் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டுமாய்ப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்கிறோம்..
கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்டுள்ள முழக்கங்கள் தவிர பிற முழக்கங்களை எழுப்ப வேண்டாம் என்றும்,
முழக்கம் எழுப்புதல்,
பேரணியில் எழுச்சியோடு பங்கேற்றல்,
அரங்கத் திடலில் உரையாற்றுவோரின் கருத்துகளை அமைதியாகச் செவிமடுத்தல்,
புத்தக அரங்குகளில் புத்தகங்களை வாங்குதல்,
சிறுநீர், கழிப்பறைகளை முறையாகவும் தூய்மையாகவும் பயன்படுத்திப்
புறவெளியில் தூய்மைக் கேடாக நடக்காமல் இருத்தல்,
குடிநீரையும் பயன்பாட்டு நீரையும் வீணாக்காமல் பயன்படுத்துதல்,
நிகழ்ச்சி முடிந்த பின்பு முறையாக அவரவர்கள் வந்த வண்டிகளின் தொடர்பாளர்களை அழைத்துச் சிக்கலில்லாமல் வண்டிகளில் ஏறித் திரும்புதல்,
குழந்தைகளை எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்ளுதல்,
அகவை மூத்தவர்களுக்கு எதிலும் முன்னுரிமை தருதல்,
முரண்பாடுடைய கருத்துகளைப் பேசி முரண்பாடுகளை அதிகப்படுத்திக்க கொள்ளாத நிலையை உருவாக்குதல்…
உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் அனைவரும் முறையாகக் கவனத்தோடு இருந்திட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவன்...
#பெரியாரிய_உணர்வாளர்கள்
#கூட்டமைப்பு.


பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு,
திருச்சிராப்பள்ளி மண்டலம்.
________________________________________________
அறிவிப்பு
~~~~~~~~~~
அன்பார்ந்த தோழர்களே!
வணக்கம்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு திருச்சிராபள்ளியில் திசம்பர் 23 _2018 அன்று கருஞ்சட்டை பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை இன்று அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

எனவே, மாநாட்டுக் குழு ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்வுகள் நடைபெறும்.
* கருஞ்சட்டை பேரணி.
~~~~~~~~~~~~~~~~~
பேரணி சரியாக பகல் 1 .00 மணிக்கு..உறையூர்,அண்ணாமலை நகர் ,கே.டி. திரையரங்கம் எதிரிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகம் முன்பாக தொடங்கி சாஸ்திரி சாலை வழியாக சிப்பி திரையரங்கம் , தென்னூர் மகாத்மா காந்தி பள்ளி,உக்கிர காளியம்மன் கோவில் வழியாக உழவர் சந்தை மாநாட்டுத் திடலுக்கு வந்தடையும்.
* தமிழின உரிமை மீட்பு மாநாடு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாநாட்டு நிகழ்வுகள் மாலை 5.00 மணிக்குத் தொடங்கி 9 மணிக்குள் முடிப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.(பனிக் காலம் ஆகையால் .
மாநாட்டுத் திடலில் மருத்துவ உதவி மையம் செயல்படும்.
* பேருந்து வழித்தடம்.
~~~~~~~~~~~~~~~~
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ...
______________________________________________
உறையூர் ,தில்லை நகர் வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகளில் கே.டி. திரையரங்கம் நிறுத்தத்தில் இறங்கினால் பேரணி தொடங்கும் இடத்திற்கும் ,நீதிமன்றம் நிறுத்தத்தில் இறங்கினால் மாநாட்டு திடலுக்கும் வந்தடையலாம்.
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து...
____________________________________________
அமெரிக்கன் மருத்துவமனை ,தில்லை நகர் ,உறையூர் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகளில் நீதிமன்றம் இறங்கி மாநாட்டு திடலுக்கும்,கே.டி. திரையரங்கம் இறங்கி பேரணி தொடங்குமிடத்திற்கும் வந்தடையலாம்.
மேலும் தொடர்புக்கு:
99425 46468 ,8667222261,7904831036,9788530918 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக