ஞாயிறு, 23 டிசம்பர், 2018

திருமாவளவன் ஜாதி தலைவரா ? குறிவைக்கிறார இயக்குனர் ரஞ்சித்?

தமிழ் மறவன் : தன்சாதி வாக்கு அடுத்தவனுக்கு பயன்பட்டு விடக்கூடாதென

கருதுவதும், தன் சாதிக்கு ஆதரவாக மட்டுமே எல்லா சாதியினரும் நிற்க வேண்டுமென கருதுவதும் எப்படிப்பட்ட மனநிலை?
தனித் தொகுதிகளில் தலித்களின் வாக்கு மட்டும்தான் இருக்கிறதாய் கருதும் முட்டாள்களை என்னவென்பது?
சாதிய அமைப்பாய் திரளாமல் பொது நீரோட்டத்தில் இணைந்து தன் கடுமையான உழைப்பால் தலைமைக்கு வந்த தலைவர் கலைஞரும் மிக,மிக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்தானே?
இப்படி பொது அமைப்புகளில் தங்களை வளர்த்துக் கொண்ட தலித் ஆளுமைகளை தலித்திய தோழர்கள் தங்கள் சமூகத்தவராகவே அங்கீகரிப்பதில்லையே ஏன்?
சாதி அரசியலை புறக்கணித்து சமூகநீதியின் பால் பயணிக்கிற தலித் சமூகத்திலிருந்து தோன்றிய தலைவர்களை பார்ப்பனீயம் பழி வாங்கும்போது நவதுவாரங்களையும் பொத்திக் கொள்ளுகிற கயமைத்தனம்தான் ஆணவக் கொலைகளுக்காக குரல் கொடுக்கிறதாம்!
தலித் என்பதாலேயே பார்ப்பனீயத்தால் பழி வாங்கப்படும் ஆளுமைகளின் நிலையும் அரசியல் ஆணவக்கொலைதானே?

கடைசியாக..,
"வன்னியர் வாக்கு அந்நியர்க்கில்லை" என்றதாலேயே மக்களும் "அந்நியர் வாக்கு வன்னியர்க்கில்லை" எனும் முடிவெடுத்த வரலாற்று நிகழ்வை நினைவூட்டுகிறோம்.
பொது சமூகத்தை விட்டு விலகி நிற்பதைவிட மூடத்தனம் வேறெதுவுமில்லை!
பொது அரசியல் தலைவராய் மிளிரும் அண்ணன் திருமா அவர்களை சாதியச்சாயம் பூச சதி நடப்பதாகவே உணர்கிறேன்.
சாதிவெறி அரசியல் அண்ணன் திருமா அவர்களின் கட்டுப்பாடுகளையும் மீறி வி.சி.கவை பலமிழக்க செய்து விடுமோ என்று அஞ்சுகிறேன்.
அண்ணன் திருமா அவர்கள் அரசியலில் அனைத்து மக்களுக்குமான தலைவராகி விடுவாரோ என பல தலித்திய தோழர்களே அஞ்சுவது நேர்மைதானா?
தி.மு.கவுடனான அவரின் வெற்றிக் கூட்டணியை உள்ளிருக்கும் சிலரை வைத்தே சிதைக்க எண்ணும் பார்ப்பனீயத்தின் சூழ்ச்சிகளை அண்ணன் திருமா அவர்கள் கவனமுடன் உற்று நோக்க வேண்டும்.
- மு.தமிழ் மறவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக