திங்கள், 17 டிசம்பர், 2018

வெற்றி பெற்ற மூன்று மாநில கோஷ்டி பிரச்சனைகளையும் ராகுல் சமாளித்து விட்டார்

Swathi K : "தேர்தலில் வெற்றி" பெறுவதை விட "கோஷ்டி மோதலை
சமாளிப்பது" தான் காங்கிரஸ் கட்சியில் கடினம்..
அதிலும் ராகுல் வெற்றி பெற்று விட்டார் என்றே நினைக்கிறேன்.. ராகுல் தலைமையில் காங்கிரசின் இன்னிங்ஸ் அருமையான ஆரம்பம்.. மூன்று மாநில வெற்றியை போலவே பாராளுமன்ற வெற்றியும் அமையும்.. வாழ்த்துக்கள்💐.. ராகுல். 
மூன்று மாநில முதல்வர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் ஆட்சி அமைந்த முதல் நாளில் இருந்து நிறைவேற்றப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.. நம்புவோம்.. அடுத்த 4-5 மாதங்கள் இவர்கள் செய்யும் ஆட்சி மிக முக்கியம்.. இவர்களின் சின்ன சின்ன தவறுகள், தோல்விகளுக்கு பிஜேபி காத்திருக்கிறது..

இந்த மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற எந்த ஒரு சொதப்பலும் இல்லாத நல்லாட்சி முக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக