திங்கள், 24 டிசம்பர், 2018

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தே தீருவோம்; உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மேல்முறையீடு!

tamil.samayam.com : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்
நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த விசாரணையில் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஆலைப் பகுதியை ஆய்வு செய்து ஆய்வறிக்கை சமர்பித்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு, வேதாந்தா நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணையில், ஆலையை மூட தமிழக அரசு கொடுத்த விளக்கங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளும் படி இல்லை. எனவே ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
அடுத்த 3 வாரங்களுக்குள் மீண்டும் திறக்கலாம் என்று, சில நிபந்தனைகளுடன் உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், ஜனவரி 21 வரை தேசிய பசுமை தீர்ப்பாய அனுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக