திங்கள், 24 டிசம்பர், 2018

பாகிஸ்தான்.. நவாஸ் செரிபுக்கு ஏழு ஆண்டு சிறை; நீதிமன்றம் தீர்ப்பு

nawaz sharif sentenced to 7 years in jail in corruption caseSamayam Tamil : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்புக்கு சவுதி அரேபியாவில் ஊழல் செய்த பணத்தில் கட்டப்பட்ட ஸ்டீல் தயாரிப்பு ஆலைகள் உள்ளதாக நீதிமன்றம் உறுதி செய்து அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்புக்கு சவுதி அரேபியாவில் ஊழல் செய்த பணத்தில் கட்டப்பட்ட ஸ்டீல் தயாரிப்பு ஆலைகள் உள்ளதாக நீதிமன்றம் உறுதி செய்து அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை வழங்கியுள்ளது. கடந்த ஜூலை நவாஸ் ஷெரிஃப், அவரது மகள் மர்யம், மருமகன் கேப்டன் முகமது சஃப்தார் ஆகியோருக்கு ஏவன்ஃபீல்டு சொத்துக்குவிப்பு வழக்கில் முறையே 11 வருடங்கள், 8 வருடங்கள், 1 வருட சிறை விதித்து நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.
லண்டனில் ஊழல் செய்து ஈட்டிய பணம் கொண்டு ஆடம்பர ஃபிளாட்கள் வாங்கியதாக மூவரும் குற்றஞ்சாட்டப்பட்டனர். இவர்கள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, நீதிமன்றம் இவர்களுக்கு ஜாமீன் வழங்கியது. மூவரும் கடந்த செப்டம்பரில் வெளிவந்தனர்.

ஷெரிஃப்பின் மகன்கள் ஹாசன், ஹுஸன் ஆகியோரும் இந்த ஊழல் வழக்கில் சிக்கியவர்கள்தான். ஆனால் கோர்ட்டில் உரிய நேரத்தில் ஆஜராகாத காரணத்தால் அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர்.

தற்போது லாகூர் அக்கவுண்டபிளிடி நீதிமன்ற ஷெரிஃப்மீது மற்றொரு ஊழல் வழக்கான அல் அசீசா வழக்கில் புதிய குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது. சவுதி அரேபியாவில் ஊழல் செய்த பணத்தில் கட்டப்பட்ட ஸ்டீல் தயாரிப்பு ஆலைகள் உள்ளதாக நீதிமன்றம் உறுதி செய்து அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை வழங்கியுள்ளது.

வழக்கம்போல ஷெரிஃப், தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் மும்முறை பாக்., பிரதமராகப் பதவி வகித்த தான், நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே உழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரால் சவுதி அரேபிய ஆலைக்கும் தனக்கும் எந்த தொடர்புமில்லை என நிருபிக்க முடியவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நவாஸின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சித் தொண்டர்கள் நீதிமன்றத்தின் வாசாலில் திரளாகக் குவிந்தனர், ஷெரிஃபுக்கு ஏழு ஆண்டுகள் சிறை வழங்கப்பட்டவுடன், தொண்டர்களால் கலவரம் ஏதும் ஏற்படாமல் இருக்க, நீதிமன்ற வாசலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக