வியாழன், 27 டிசம்பர், 2018

கருஞ்சட்டை பேரணி ஒரு ஆர் எஸ் எஸ் பேரணி.. திராவிடத்தை தவிர்த்தது ஏன்? .. சுப்பிரமணியம் சுவாமி விடியோ!

திராவிடம் என்ற சொல்லே அவர்கள் எழுப்பிய  முழக்கங்களில் கிடையாது. திமுகவை குறி வைப்பதாக பாவ்லா காட்டி கொண்டு திராவிட கோட்பாட்டுக்கு எதிரான ஒரு சதியாகத்தான் கருஞ்சடை பேரணி அமைந்திருந்தது  .. திராவிடம் என்பது திமுகவையும் தாண்டியது .
இது முழுக்வும் திராவிட கருத்தியலை எதிர்ப்போரின் நிகழ்ச்சி நிரல் ஆகத்தான்  தெரிகிறது.
திராவிட கோட்பாடே ஒரு ஆங்கிலேயரின் கற்பனை வாதம் என்றுதான் பார்பனீயம் இன்றுவரை கூறிக்கொண்டு இருக்கிறது .
தங்களின் ஜாதி பெருமையை அழிந்து விடாமல் காப்பாற்றவே அப்படி கூறுகிறது.  .
திராவிட தேசத்தில் ஒருபோதும் ஜாதி இருந்ததே கிடையாது . ஜாதி என்ற சொல்லே தமிழில் கிடையாது .
ஆரிய பார்ப்பன பனியாக்களின் ஒரே எதிரி திராவிட கருத்தியல்தான்
கூலி பட்டாளங்களை வைத்து தங்கள் நாடகத்தை தொடக்கி  உள்ளார்கள். பெரியாரை களவெடுக்கும் முயற்சியே இந்த் கருஞ்சட்டை பேரணி . பெரியாரின் அடிப்படை திராவிட கருத்தியலின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்தான் இந்த திருமுருகன் காந்தி போன்றவர்கள் அரங்கேற்றிய திருச்சி நாடகம்.

Kalai Selvi : உண்மையான பெரியாரிஸ்ட்
களே கொஞ்சம் பதில் சொல்லுங்கள் அன்றைக்கு வந்து குறுக்குசால் ஓட்டாதீர்கள் என்று  மல்லுக்கட்டியவர்கள்
பதில் சொல்வார்களா?
கலைஞரும் | மா நன்னன்  மற்றும் சிலர் வணக்கத்துக்குரிய உரியவரில்லாமல் போனதெப்படி?
வீர வணக்கத் தீர்மானங்கள்: 
 1. தமிழ்மொழி, இன, நாட்டுரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த ஈகியர்களுக்கும், 1938 - 1965 மொழிப் போராட்டங்களில் உயிரீந்த நடராசன், தாளமுத்து, அரங்கநாதன், சிவகங்கை இராசேந்திரன் உள்ளிட்ட எண்ணற்ற மொழிப் போராளியர்களுக்கும், சாதி ஒழிப்புப் போராட்டக் களங்களில் இதுநாள் வரை உயிரீந்த கீழ்வெண்மணியின் 44 தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் உயிரீந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி உள்ளிட்ட ஈகியர்களுக்கும், பார்ப்பனிய மற்றும் மதவெறிகளுக்கு எதிராக மக்கள் நேயத்தோடுப் போராடி உயிரீந்த ஈகியர்களுக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது. 

2. தமிழ்நாட்டிற்கு வெளியே பார்ப்பனிய மற்றும் மதவெறிகளுக்கு எதிராகப் போராடி அம் மத வெறியர்களாலே படுகொலை செய்யப்பட்டு உயரீந்த தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கெளரி லங்கேஷ் உள்ளிட்ட எழுத்தாளர்கள், அறிஞர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான போராளியர்கள், வெகுமக்கள் என அனைவருக்கும் இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது. 
3. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தன் இன்னுயிர் ஈந்திருக்கிற எண்ணற்ற போராளியர்களுக்கும், ஈகம் செய்திருக்கிற தமிழீழ மக்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உயிரீந்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் அப்துல் ரகூப், முத்துக்குமார், செங்கொடி உள்ளிட்ட ஈகியர் அனைவருக்கும் இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக