செவ்வாய், 18 டிசம்பர், 2018

மகிந்த ராஜபக்சே எதிர்க்கட்சி தலைவரானார்! ...சம்பந்தர் அதிர்ச்சியிலா?

Mahinda Rajapaksa was named as the Leader of the Opposition today by Speaker Karu Jayasuriya
Ajeevan Veer : எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தர் இழந்ததால்
அதிர்ச்சியில் இருப்பதாக பரப்புரை செய்து வருகிறார்கள்.
தமிழரசுக் கட்சி அல்லது கூட்டமைப்பு பாராளுமன்றம் வருவது அமைச்சு பதவிக்காகவோ அல்லது எதிர்க் கட்சி தலைமை ஏற்கவோ அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி அமைச்சு பதவியேற்று மக்களுக்கு சேவை செய்தால் அதுபோல நல்ல விடயம் வேறேதும் இல்லை. இது எனது தனிப்பட்ட கருத்து.
ஆனால் சிலரது பிரதமர் பதவி போனதை மறந்து அடுத்தவனது எதிர்க் கட்சி பதவி போனதே என நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இதுபோல கொடுமை வேறெதும் இல்லை.
சம்மந்தர் ஏற்கனவே எதிர்க் கட்சி தலைவர் பதவியை தேவையில்லை என சொல்லிவிட்டார். அது சிலருக்கு தெரியாமலிருக்கலாம். அவர்களுக்கு தேவையானால் இன்றும் அரசில் கெபினட் பதவி பெறலாம்.அரசோடு இணைந்து செயல்படலாம். அவர்கள்தான் தயாராக இல்லை. தமிழ் கட்சியின் நோக்கம் பதவியல்ல. நான் அவர்களோடு உடன்பாடு இல்லாவிட்டாலும் இதுவே உண்மை!

ஒரு நாட்டின் ஜனாதிபதி சாதாரண பா.உ ஆகி எதிர்க் கட்சித் தலைவர் வரை ஆனது நம் நாட்டில்தான். அதை மறைக்க மற்றவர்களுக்கு சேறு பூசுவது படு முட்டாள்தனம்.
ஆனால் சில நேரம் மகிந்தவுக்கு பா. உ பதவியும் இல்லாமல் போய் சிராவோடு சதி செய்து ஆட்சியை கவிழ்ந்ததாக தேசத்துரோகத்துக்காக தண்டிக்கப்பட்டு இலங்கை குடியுரிமையும் இல்லாமல் போகலாம். அதை மறக்க வேண்டாம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக