ஞாயிறு, 16 டிசம்பர், 2018

நடிகர் கார்த்திக் புது கட்சி துவக்கம்.." மனித உரிமை காக்கும் கட்சி’


தினகரன்  : நெல்லை: நடிகர் கார்த்திக் புதுகட்சி தொடங்கினார். நெல்லையில் கட்சியின் பெயரை அறிவித்தார்.நடிகர் கார்த்திக் கடந்த 2006ல் பார்வர்டு பிளாக் கட்சியில் சேர்ந்தார். கட்சியின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் 2009ல் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி அவரே அதன் தலைவராக இருந்தார். இந்த கட்சி அப்போது நடந்த பொதுதேர்தலில் பாஜ கூட்டணியிலும் இடம் பெற்றது. தேர்தல் முடிந்ததும் கட்சியும் காணாமல் போனது. இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிதாக அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி உள்ளதாக கார்த்திக் அறிவித்துள்ளார்.


இது குறித்து, நெல்லையில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை துவக்கினேன். பின்னர் நாடாளும் மக்கள் கட்சி என மாற்றம் செய்தேன். அக்கட்சியில் இருந்த நிர்வாகிகள் என் முதுகில் குத்தி விட்டனர்.எனவே தற்போது நான், மீண்டும் ‘மனித உரிமை காக்கும் கட்சி’ என்ற புதிய கட்சியை துவக்கி உள்ளேன். ஒவ்வொருவரது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இக்கட்சி துவக்கப்பட்டு உள்ளது. இந்த கட்சியின் மாநாட்டை விரைவில் அம்பையில் நடத்த உள்ளேன். அதில் கட்சியின் கொள்கைகளை விளக்கி கூறுவேன்.மத்திய பாஜ ஆட்சியால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தி வைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக