செவ்வாய், 4 டிசம்பர், 2018

கக்கன் குடும்பத்தில் மூன்று மருத்துவர்கள் இருந்தும் ஏன் அவர் அரசு மருத்துவமனையில்...?

கக்கனுக்கு ஐந்து ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உண்டு. முதல் மகன் P.K. பத்மநாபன் Registrar of Cooperative Societies, Tamil Nadu ஆக இருந்து ஓய்வு பெற்றவர், இரண்டாவது மகன் P.K. Pakiyanathan Simpsonல் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர், இவருடைய மனைவி குழந்தைகள் நல மருத்துவர். இவர் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர், மூன்றாவது மகன் P.K. காசிவிஸ்வநாதன் IPS கமிஷனராக இருந்து ஓய்வு பெற்றவர், நான்காவது மற்றும் ஐந்தாவது மகன்களான P.K. சத்தியநாதன் மற்றும் P.K. நடராஜமூர்த்தி ஆகியோர் மருத்துவர்களாக இருக்கறார்கள். ஒரே மகளான கஸ்தூரி சிவசாமி ஒரு அரசியல்வாதி. இவரின் கணவர் சிவசாமி அந்தமான் யூனியன் பிரதேசத்தின் Chief Engineer ஆக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய தம்பி விஸ்வநாத கக்கன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர், இந்து முன்னணி அமைப்பில் துணை தலைவராக இருந்தவர். காஞ்சி மடத்திற்கு மிகவும் நெருங்கியவர். தற்போது கக்கன் குடும்பத்தில் மூன்றாம் தலைமுறை மருத்துவர்களும், இரண்டாம் தலைமுறை IPSகளும் பலர் இருக்கிறார்கள். #கக்கன் அவர்கள் அரசியலில் இருக்கும் போதே அவருடைய மகன்கள் மற்றும் மகளை நல்ல நிலையில் தான் ஆக்கி வைத்துள்ளார். அவர் இறக்கும் போது அவருடைய குடும்பத்தில் மூன்று மருத்துவர்கள் இருந்தும் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது மர்மமே....
Joel ajith

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக