புதன், 5 டிசம்பர், 2018

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பாணியில் பாஜக மதவெறியை ஊட்டி ஊட்டி ..

Swathi K : எனது தந்தையை போல் இன்னும் எவ்வளவு உயிர்களை நாம்
இழக்கப்போகிறமோ தீவிரவாததால் - உத்தர பிரதேசத்தில் நேற்று "பசு தீவிரவாதிகளால்" கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரின் 16 வயது பையன்.
நேற்று சிறுபான்மை இனமக்கள், இன்று இந்து மதத்தை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், நாளை நீங்களும் நானும்.. இவ்வளவு தான் இந்த்துவா தீவிரவாதம்.. மனிதனுக்கு மதவெறி ஏறினால் அவன் மதம் பிடித்த யானையை விட ஆயிரம் மடங்கு வெறி பிடித்து அலைவான்.. அந்த வெறியை தான் RSS, BJP மற்றும் அதன் துணை அமைப்புகள் அப்பாவி இந்துக்களுக்கு ஏற்றி மதவெறி பிடித்து அலையவைக்கிறார்கள் அவர்களின் சுயலாபத்திற்கு.. இதை பிஜேபி, ஹிந்த்துத்வா ஆதரவு முகநூல், வாட்ஸாப் குரூப்களில் தினசரி பார்க்கலாம்.. பிஜேபி, RSS அதன் கிளை அமைப்புகள் "இந்து ISIS", "இந்து தாலிபான்கள்" தான்.. விளைவு கொஞ்சம் கொஞ்சமாக தெரியவருகிறது.. இவர்களை வளரவிட்டால் மாபெரும் அழிவு இன்னும் சில வருடங்களில் தெரியும்.. இவர்களால் தான் "இந்து மதம்" அழிவை சந்திக்கப்போகிறது.. இந்தியாவும் அழிவை சந்திக்கப்போகிறது..

இன்று நாம் பார்க்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இதே போல் மதவெறியை ஊட்டி ஊட்டி தான் தீவிரவாதத்தை வளர்த்தார்கள்.. அதன் விளைவை தான் அந்த நாடுகள் இன்று அனுபவித்து வருகிறது.. நாமும் நாளை அனுபவிப்போம்..
உங்கள் உறவினரோ, நண்பரோ, குழந்தைகளோ இந்த்துவா சார்ந்த அமைப்புகளில் சேராமல் பார்த்துக்கொள்ளவும்.. அந்த அமைப்புகள் விஷ விதைகளை மக்களிடம் தூவி தூவி உங்களை சிந்திக்க விடாமல் செய்து.. சக மனிதர்கள் மேல் வெறுப்பை வளர்த்துவிடும்..
இந்தியாவின் முதல் எதிரி பாகிஸ்தானோ, சீனாவோ இல்லை.. நாட்டின் உள்ளே இருந்து தீவிரவாதத்தை வளர்த்து வரும் பிஜேபி, RSS மற்றும் அதன் துணை அமைப்புகள் தான்.. முதலில் இந்தியாவையும், இந்துக்களையும் இந்த அமைப்புகளிடம் இருந்து தான் நாம் பாதுகாக்க வேண்டும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக