வியாழன், 13 டிசம்பர், 2018

வெற்றியை நிர்ணயிக்கும் தலித் கிறிஸ்தவ இஸ்லாமிய வாக்குவங்கி .. 5 மாநில சட்டசபை தேர்தல்..

Adv Manoj Liyonzon : தெலுங்கானா ராஜஸ்தான் சட்டீஸ்கர் மத்தியபிரதேசம் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தோற்றாலும் போட்டியிடும் வலிமையுடன் தான் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
இந்தியாவில் உயர்த்தப்பட்ட சாதியினர், இடைநிலை சாதிகள் மற்றும் கிறிஸ்தவ இஸ்லாமிய தலித் வாக்காளர்கள் என்று வாக்காளர்களை வரையறுக்கலாம். அதில் பெரும்பான்மையாக வாழும் இடைநிலை சாதியினர் சரிநிகராக காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் வாக்களிக்கிறார்கள். உயர்த்தப்பட்ட சாதியினரும் இந்துக்களாக இருப்பதனால் அவர்களின் வாக்குகளும் பெரும்பாலும் பாஜகவிற்கே. ஆக FC மற்றும் BC வாக்குகளை பொறுத்தமட்டில் பாஜகவே பலம் பொறுந்தியிறுக்கிறது.
அதையும் தாண்டி எது தற்போது பாஜகவை தோற்கடித்திருக்கிறது!?
பாஜகவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய தலித் வாக்குகள் தான்.

காங்கிரஸ்-பகுஜன்சமாஜ்-சமாஜ்வாடி-கம்யூனிஸ்ட் கட்சியினிடையே கூட்டணி அமையாததால் பாஜகவிற்கு எதிரான வாக்குகள் சிதறடிக்கப்பட்டுள்ளது. அதுவே நூழிலை விகிதத்தில் பாஜக சில இடங்களில் தோற்கவும் ஜெயிக்கவும் வழிவகுத்துள்ளது. ஒருவேளை காங்கிரஸ்-பகுஜன்சமாஜ்-சமாஜ்வாடி-கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி அமைந்திருந்தால் இன்னும் கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர் சீட்டுகள் கிடைத்திருக்கும். பாஜக இன்னும் அதிக எண்ணிக்கையில் தோற்றிருக்கும். அப்படி இந்த கூட்டணிக்கு கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருந்தால் அதன்மூலம் ராஜியசபை உறுப்பினர் எண்ணிக்கை கூடியிருக்க வழிவகுத்திருக்கும். அது பாஜவை மேலும் வலுவிழக்க செய்திருக்கும்.
ஆக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கிறிஸ்தவ இஸ்லாமிய தலித் வாக்குகள் தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதே கள எதார்த்தம்.
அதிலும் குறிப்பாக தலித் வாக்குவங்கி மற்ற இரண்டு வாக்குவங்கிகளை விட எண்ணிக்கையில் பெரிது ஆகும். எனவே தலித் வாக்குவங்கி வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் இன்னும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் கிறிஸ்தவ இஸ்லாமிய வாக்குகள் என்ன ஆனாலும் சிதறாது, காங்கிரஸ் கூட்டணிக்கே விழும். அதேவேளையில் தலித் வாக்குகளை சிதறடித்து நூலிழையில் வெற்றி பெற வேண்டி தான் பாஜக பல காய்களை நகர்த்தி வருகிறது. அதில் ஒன்று தான் தலித் அமைப்புகள் தனியாக போட்டியிட வேண்டும் என்ற தூண்டிவிடுவதும், அம்பேத்கருக்கு மாலை மரியாதை செலுத்துவதும்.
இந்த கள எதார்த்தத்தை உணர்ந்து வெற்றியை நிர்ணயிக்கும் தலித் வாக்குகளை ஒருங்கிணைக்கும் தேர்தல் வியூகம் வகுத்து மானுட விரோத தேச விரோத பாசிச இந்துத்வ பாஜகவை தோற்கடிப்பது அவசியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக