வியாழன், 13 டிசம்பர், 2018

பாட்னா .. 3 தலாக் கூறிய கணவனை பஞ்சாயத்தில் வெளுத்து வாங்கிய மனைவி

tamiloneindia:  பாட்னாவின் முசார்புர் மாவட்டத்தில், ஊர் மக்கள் முன்னிலையில் தலாக் சொன்ன கணவரை, அங்கேயே வைத்து மனைவி சரமாரியாக அடித்துத் தாக்கியுள்ள சம்பவம் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு இரவு, பெற்றோர்களை எதிர்த்து, ஓடிப்போய் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள், முஹமது துலாரேவும் சோனியா கட்டூனும். பின்னர் பெற்றோர்கள் இவர்களை ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் இருவரும் கணவன் -மனைவியாக வாழத் தொடங்கிய பின்னர், சில மாதங்களுக்கு பின் எழுந்த கருத்து வேறுபாட்டினால் இருவருக்கும் அதிக சண்டைகள் வந்தன.
 ஊர் பஞ்சாயத்தில் மூன்றாவது முறை தலாக் சொன்னதும், கணவரை வெளுத்து வாங்கிய மனைவி! இதனால் இனி, மனைவியுடன் வாழ முடியாது என்று முடிவு எடுத்த துலாரே,

ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி தன் மனைவிக்கு முத்தலாக் சொல்லி பிரிவது என்ற முடிவுக்கு வந்தார்.
இதற்கு தலாரேவின் பெற்றோர்களும் உடன்பட்ட நிலையில், ஊர் பஞ்சாயத்து கணவன் – மனைவி இருவரையும் சமாதானப்படுத்த முயன்றது. ஆனாலும், தலாரே தன் மனைவி சோனியாவுக்கு மூன்று முறை தலாக் சொல்லி பிரிவது என்பதில் உறுதியாக இருந்தார்.
பிறகு இரண்டு முறை தலாக் சொன்னவர், மூன்றாவது முறை தலாக் சொல்லும்போது, உணர்ச்சி மிகுதியால் துலாரேவின் மனைவி சோனியா, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து வந்து துலாரேவை சரமாரியாக அறைந்து தாக்கினார்.
அதேபோல், தனக்கு ஏற்பட்ட அவமானம் காரணமாக, துலாரேவும் சோனியாவை திருப்பி அடித்துவிட்டார். ஆனால் தலாக் சொன்ன குறிப்பிட்ட காலத்துக்கு திருமணம் செய்யக் கூடாது என்கிற சில முத்தலாக் விதிமுறைகளை மீறி, தலாரே இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், சோனியாவின் பெற்றோர்கள் தலாரே மீது முத்தலாக் அமைப்புகளில் புகார் அளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக