சனி, 15 டிசம்பர், 2018

கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாஜக ரூ.100 கோடி கொடுத்தது? வாக்குகளை பிரிக்கவா? முன்னாள் மாக்சிஸ்ட் எம்பி

“சிபிஎம் சார்பில் ராஜஸ்தானில் வெறும் 27 வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டனர். ஏறக்குறைய 4 லட்சம் மதச்சார்பற்ற வாக்குகளை பிளவுபடுத்த மார்க்சிஸ்ட் உதவியுள்ளது. மூன்று தொகுதிகளில் பாஜகவின் வெற்றிக்கும் மார்க்சிஸ்ட் உதவியுள்ளது. பில்லிபங்கா தொகுதியில் பாஜக வேட்பாளர் தர்மேந்திர குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 278 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இங்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் 2659 மதச்சார்பற்ற வாக்குகளைப் பெற்றுள்ளார்
கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாஜக ரூ.100 கோடி கொடுத்ததா?மின்னம்பலம் : மதச்சார்பற்ற வாக்குகளில் பிளவை ஏற்படுத்தி பாஜகவை வெற்றிபெற வைக்க அக்கட்சியிடமிருந்து சிபிஎம்மின் பிரகாஷ் காரத் பிரிவு 100 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் தொகுதியிலிருந்து 1999-2009 வரை இருமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்துல்லா குட்டி.
மாநிலத் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2009ஆம் ஆண்டு சிபிஎம்மிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு காங்கிரஸில் இணைந்த அவர், கண்ணூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

 2016ஆம் ஆண்டு தலச்சேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர் மார்க்சிஸ்ட் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
அண்மையில் நடந்துமுடிந்த ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலை தொடர்புபடுத்தி இவ்வாறு கூறியுள்ள அப்துல்லா குட்டி, “மதச்சார்பற்ற வாக்குகளில் பிளவை ஏற்படுத்தி பாஜகவை வெற்றிபெற வைக்க அக்கட்சியிடமிருந்து சிபிஎம்மின் பிரகாஷ் காரத் பிரிவு 100 கோடி ரூபாய் பெற்றுள்ளது. பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற சிபிஎம் உதவியது. இல்லையெனில் பல இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கும்” என்று அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டெல்லியிலுள்ள தனது பழைய சிபிஎம் நண்பர்கள் கூற இதனைக் கேள்விப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அப்துல்லா குட்டி நேற்று (டிசம்பர் 14) தனது முகநூல் பக்கத்தில், “சிபிஎம் சார்பில் ராஜஸ்தானில் வெறும் 27 வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டனர். ஏறக்குறைய 4 லட்சம் மதச்சார்பற்ற வாக்குகளை பிளவுபடுத்த மார்க்சிஸ்ட் உதவியுள்ளது. மூன்று தொகுதிகளில் பாஜகவின் வெற்றிக்கும் மார்க்சிஸ்ட் உதவியுள்ளது. பில்லிபங்கா தொகுதியில் பாஜக வேட்பாளர் தர்மேந்திர குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 278 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இங்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் 2659 மதச்சார்பற்ற வாக்குகளைப் பெற்றுள்ளார். மேலும், பல இடங்களில் மார்க்சிஸ்ட் வேட்பாளர்களால் தங்களது டெபாசிட்டைக் கூட தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. கோடிகளைப் பெற்றுக் கொண்டு அவர்கள் புத்திசாலித்தனமான விளையாட்டை விளையாடியுள்ளனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கட்சிக்குள் விவாதிக்க யோசித்துவருவதாகவும் அப்துல்லா குட்டி தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக