ஞாயிறு, 25 நவம்பர், 2018

டுவிட்டர் CEO ஜாக்டோர்செய் ஐ தீண்டிய பார்ப்பனீய ..


கவிஞர் கலி .பூங்குன்றன் :
உமா சக்கரவர்த்தி-பார்ப்பனிய ஆதிக் கத்தின்
கோரப்பிடியில் பண்டைய இந்தியா (பால், ஜாதி, இனம் மற்றும் வாழிடம்) என்ற கட்டுரையை எழுதியவர்
டுவிட்டர் சமூகவலைதளத்தின் அதிபர் ஜாக்டோர்செய் 19.11.2018 (திங்கள்) இந்தியாவிற்கு வருகை புரிந்திருந்தார். அப்போது இந்தியாவில் தலைசிறந்த ஊடகவியாளர்கள் பேச்சாளர்கள், மனித உரிமைப் போராட்டக்காரர்களைச் சந்தித்தார், அப்போது ஒரு பெண் ஊடகவியலாளர் பார்ப்பனியத்தை நசுக்கி எறிவோம் என்ற பதாகையை ஒரு பெண் பிடித்திருப்பது போன்ற ஒரு போஸ்டரை டுவிட்டர் சமூகவலைதளத்தின் அதிபருக்கும் வழங்கியிருந்தார். அந்தப் போஸ்டரை கையில் வைத்திருப்பது போன்ற படம் ஒன்று ஊடகங்களில் வெளியானது. இதனை அடுத்து ஒட்டுமொத்த பார்ப்பனக் கூட்டமும் டுவிட்டர் வலைதள அதிபரை, இந்துமதவிரோதி, ஜாதிவெறிபிடித்தவர், என்றெல்லாம் வசைபாடி, உனது சமூகவலைதள அலுவலகத்தில் பல பார்ப்பனர்கள் பணிபுரிகின்றார்கள்; அவர்களால் தான் உனது வணிகம் நடக்கிறது, நாங்கள் இல்லையென்றால் உனது நிலை என்னவாகும்? உடனடியாக மன்னிப்புக்கேள் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுக்க அவர் 20.11.2018-அன்று தனது பதிவில் வெளியான படத்திற்கு மன்னிப்பு தெரிவித்திருந்தார்.
இந்த 2018லும் பார்ப்பனர் ஆதிக்கம் எந்தளவு கொழுப்பேறிக் குதிக்கிறது என்பதற்கு அடையாளமே இது!
பார்ப்பனியத்தை நொறுக்குவோம், ஒரே ஒரு சாதாரண வாக்கியம்தான். ஆனால் இந்த வாக்கியம் பார்ப்பனர்களால் சமூக வலைதளத்தில் கொடூரவாக்கியமாக பார்க்கப்பட்டு, டுவிட்டர் வலைதள அதிப ரையே மன்னிப்பு கேட்க வைத்துவிட்டது என்பது சாதாரணமானது தானா? 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள டுவிட்டர் சமூகவலைதள அதிபர் ஜாக் டோர்சே, மோடி உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களைச் சந்தித்தார். 19.11.2018அன்று தலைநகர் டில்லியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது ஒரு பெண் ஊடகவியலாளர் பதாகை ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார். அதில் ஒரு பெண் பார்ப்பனிய ஆதிக்கத்தை நொறுக்குவோம் என்று எழுதப்பட்ட வாசகத்தை தூக்கிப் பிடித்தி ருக்கிறாள். அந்தப் படத்தில் உள்ள வாசகம் இன்றைய இந்தியாவில் பார்ப்பனிய ஆதிக்கம் அதன் பயனாக இந்து சமூகத் திடையே குறிப்பாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிகம் காணப்படும் ஜாதிவெறி போன்றவைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதாக உள்ளது. இது எந்த ஒரு தனிப் பார்ப்பனரையோ அல்லது தனிப்பட்ட நபர்களையோ விமர்சிப்பதான வாக்கியமும் அல்ல!
பார்ப்பனியம் என்றால் என்ன? அதன் ஆதிக்கம் என்பது வெற்றான சாதாரண வாக்கியம் என்று கூறிவிடமுடியாது பரந்துவிரிந்த இந்திய தீபகற்பத்தில் பவுத்தம் அழிந்த உடன் வேதமரபினர் அதாவது பார்ப்பனர்களின் ஆதிக்கம் துவங்குகிறது, வேதமரபு அதாவது பார்ப்பனிய கொள்கை என்பது ஜாதி ரீதியாக மக்களைப் பிரிப்பது, தீண்டாமைக் கொடுமை, மனிதர்களை சமூகத்தில் இருந்து விலக்கி வைப்பது, மிருகங்களுக்கும் கீழாகப் பெண்களை நடத்துவது, பெண்களை கொடுமையான வகையில் அடக்கிவைப்பது போன்றவை தான் பார்ப்பனியம் சுருக்கமாக சொல்லப்போனால் பார்ப்பனர்களைத்தவிர வேறு யாரும் சுதந்திரமாக காற்றைக்கூட சுவாசிக்க கூடாது, அவ்வளவுதான்.
இதுதான் பார்ப்பனியம், மேலே சொல்லப்பட்ட மனிதக் கொடூரங்களை கொஞ்சமும் குறைவில்லாமல் பார்த்துக்கொள்வது பார்ப்பனர்களின் தந்திரம், ஜாதிய ஆதிக்கம், பார்ப்பனிய அடக்கு முறை இல்லாத இடம் ஒன்றைக் கூறுங்கள், சுடுகாட்டில் கூட, பிணத்தைக் கொண்டு செல்வதில் கூட பார்ப்பனியம் தன்னுடைய கொடூர கொள்கைகளைத் திணித்துள்ளது. இந்தியாவில் ஊடகம், நீதித்துறை, கல்வித்துறை, தொழில்துறை, வணிகம், பொது நிர்வாகம், அரச அதிகாரம் என அனைத்திலும் பார்ப்பனியம் வழிந் தோடிக்கொண்டிருக்கிறது. ஜாதி வெறி, ஜாதிய வன்முறைகள் எங்கு நடந்தாலும் நேரடியாக அங்கு பார்ப்பனர்கள் இல்லை, ஆனால் அந்த வெறியாட்டத்தின் பின்னால் பார்ப்பனியம் தனது விஷமத்தனத்தை அரங்கேற்றிக் கொண்டு உள்ளது.
பார்ப்பனியத்தின் பார்வையில் பார்ப்பனர்கள் அனைத் திலும் உயர்ந்தவர்கள் அவ்வளவுதான், தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட எப்போதும் அவர்கள் ஜாதிச்சக்கரத்தை சுழற்றிக் கொண்டே இருப்பார்கள். ஜாதிக்குள் திருமணம் என்பது பார்ப்பனிய கொள்கையின் மூல வேர்! இந்து சமூகத்தில் எந்த ஒரு திருமணமானாலும் பார்ப்பனர் தான் அதை இறுதி முடிவு செய்யும் இடத்தில் உள்ளார். இதன் மூலம் தானே ஜாதி என்னும் அசிங் கத்தை உறுதியாக பிடித்து வைத்திருக்க முடியும். இதைத்தவிர சமூகத்தில் தொழில் புரிபவர்களில் ஜாதி, பழகுவதில் ஜாதி, உணவில் ஜாதி என அனைத்திலும் நிறைந்தி ருக்கிறது, இதன் மூலம் பார்ப்பனிய வீரியம் குறையாமல் இருக்கிறது. இதைத்தான் பார்ப்பனிய ஆதிக்கம் என்று கூறுகிறோம், இதை உடைக்கத்தான் தென்ன கத்தில் தந்தை பெரியார், வடக்கே பாபாசாகேப் அம்பேத்கர், மகாத்மா ஜோதிராவ் பூலே, சாகு மகாராஜ் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தார்கள். அவர் களின் பணி மகத்தானது, அவர்கள் விட்டுச்சென்ற பணியைத் தொடருபவர்கள் கூறிய வார்த்தை தான் பார்ப்பனிய ஆதிக் கத்தை நொறுக்குவோம் என்ற பதாகை! தங்கள் ஆதிக்கம் பறிபோவதை பார்ப்பனர்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா?? இன்று சமூகவலைதளங்கள் எளிமை யான கருத்து சுதந்திரப் பதிவுகள் கூறும் அங்கமாக விளங்குகிறது. அங்கு சமூகநீதி மற்றும் ஜாதி அடக்குமுறைக்கு எதிரான வர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.
வெறுப்புப் பேச்சு என்றால் என்ன? இன்று அதன் அளவுகோல் எது?
முன்பு பெண்கள் ஆண்களுக்கு எதிராக நின்றாலே அது மோசமான செயலாகப் பார்க்கப்பட்டது, பின்பு நாகரிக வளர்ச்சி - பெண்கள் படித்து விட்டார்கள். சிந்தனைத் தெளிவு பெற்று விட்டார்கள். இப்போது தங்களின் மீதானஅடக்கு முறைக்கு எதிராக பெண்கள் குரல் கொடுத்தால் அது வெறுப்புப் பேச்சு என்றும் திமிர்ப்பேச்சு என்றும் கூறப்படுகிறது. அதே போல் சமூகத்தில் ஜாதிய மற்றும் சமூக அடக்குமுறைக்கு எதிராக பேசினாலே அது வெறுப்புப் பேச்சு, சமூக விரோதிகளின் பேச்சு என்று அளவுகோல் வைத்துவிட்டனர். பாலியல் ரீதியாக மிரட்டல், விடுப் பவர்கள், ஜாதி ரீதியாக வன்முறைப் பேச்சு பேசுபவர்கள், மாட்டி றைச்சிக்காக கொலை செய்தகொலையாளிகளைக் கொண்டாடு பவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை பொது இடங்களில் அடித்துத் துன்புறுத்துவதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அதை படமாக பிடித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு, நாளை உனக்கும் இதே நிலைதான் என்று மற்றோர் தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தவரை மிரட்டுவது போன் றவை வெறுப்பான பேச்சோ, அல்லது மிரட்டல் பேச்சோ அல்ல!
மாறாக இந்தக்கொடுமைகளுக்கு எல்லாம் மூலம் பார்ப்பனியம் என்று சொல்லுவது வெறுப்புப் பேச்சு மற்றும் ஜாதிய வெறுப்பு பேச்சாக காட்டப்படுகிறது. ஜாக்டோர் செய் பிடித்திருந்த பதாகை ஒரு தனிப்பட்ட சமூகத்து மக்களையோ அல்லது தனிப்பட்ட நபரையோ விமர்சித்தது அல்ல! ஆனால் ஒட்டுமொத்த பார்ப்பனர்களும், இந்துத்துவ அமைப்புகளும் அந்தப்பதாகைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர், வன்முறை பேச்சில் இறங்கியுள்ளனர். ஜாக்டோர் செய் சமூக வலைதளப்பக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொச்சையான வசைமொழிகள்! இவ்வளவு கோபம் கொண்ட நபர்கள் ஜாதிய கொடுமை காரணமாக சேலத்தில் 13 வயது சிறுமி தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தனர்?
இந்துத்துவ பார்ப்பனர்களின் தொடர் சமூகவலைதள விமர்சனங்களைக் கண்டதும் டுவிட்டர் வலைதளத்தில் சட்டவிவகாரங் களைக் கவனிக்கும் அந்த நிறுவன நிர்வாகி விஜய கட்டே மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறும் போது படம் வெளியிட்டது தொடர்பாக எங்கள் நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இது ஒரு தனிப்பட்ட நபர் கொடுத்த வாசகம் தான், அது அந்த தனிப்பட்ட நபரின் மனதில் பட்ட வாசகத்தை எழுதிக்கொடுத்துள்ளார்.
அந்த நேரத்தில் அதை மறுக்க முடியாமல் ஜாக் டோர் செய் அதை வாங்கியுள்ளார். ஆகவே இதைப் பெரிதுபடுத்தவேண்டாம் என்று இந்துத்துவ மற்றும் பார்ப்பனர்களிடம் மன்றாடியுள்ளார். (விஜய்கட்டாரும் பார்ப்பனர் தான்) மேலும் நாங்கள் எங்களின் பயனாளர்களை இழக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ஜாக்டோர் செய் பதிவுக்கு ஆதரவு தெரிவித்த பெண்களுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் விட்டிருக்கின்றனர். கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
அதில் ஒருவர் ஒரு பெண்ணின் பதிவிற்கு மிகவும் அருவருப்பாக கொடூரமான பதிலை எழுதியுள்ளார். அதாவது டில்லியில் 2013-ஆம் ஆண்டு ஒரு பெண்ணிற்கு (நிர்பயா பாலியல் வன்கொடுமை) நடந்த ஒன்று நினைவிருக்கிறதா, அதேபோல் உனது பெண் உறுப்பிலும் இரும்பு ராடுகளைத் திணித்து கர்ப்பப்பையை குடலோடு வெளியே உருவி விடுவோம் என்று எழுதியுள்ளார். சமூகவலைதளத்தில் கூட பெண் களுக்குப் பாதுகாப்பு இல்லை, இதை ஒரு சாதாரணமான ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது, மார்கண்டேய கட்சு முதல் பல பார்ப் பனர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.
என்ன செய்துகொண்டு இருந்தாலும் வேடிக்கைப் பார்க்க பார்ப்பனர்கள் என்ன இளைத்தவர் களா? என்றெல்லாம் பதிவிட்டுள்ளனர். இதிலிருந்து என்ன தெரிகிறது? பார்ப் பனியம் ஒழிந்து விட்டால் ஜாதி ஒழிந்துவிடும், ஜாதி ஒழிந்து விட்டால் பார்ப்பனர்களின் கொட்டம் ஒழிந்துவிடும். ஒட்டு மொத்த சுகபோகங்களை அனுபவித்துவரும் பார்ப்பனர்களுக்கு பார்ப்பனியத்தை அடித்து நொறுக்குவோம் என்ற வார்த்தை ஒரு பயங்கர, கொடூர, அச்சமூட்டும் வாசகமாகத்தானே தெரியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக