வெள்ளி, 9 நவம்பர், 2018

நடிகர் விஜய் மீது கருணை கொள்ளுதல் தகாது ,கமல் ரஜினியை போல் பாஜகவின் C டீம்...

Shalin Maria Lawrence : நேற்றுதான் 7ஆம் அறிவு
படத்தில் இடம்பெற்ற
இடஒதுக்கீட்டிற்கு எதிரான வசனங்களுக்காக முருகதாஸ் மேல் வழக்கு போட முடியுமா என்பதை பற்றி பேசி கொண்டிருந்தோம். ஏனென்றால் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கருத்தை பரப்பதுவது சட்டப்படி குற்றமாகும். அதற்காக அவர் மேல் ஒரு defamation கேஸ் போடலாம்.
அவரின் எல்லா படங்கள் மீதும் வழக்கு போடலாம்.அவ்வளவு அயோக்கியத்தனம் செய்து இருக்கிறார் முருகதாஸ்.
அதற்கு முன்பு...
வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றால் சென்சார் போர்டு (CBFC,Tamilnadu film division)மேல்தான் முதலில் செய்ய வேண்டும்.அரசு நல திட்டங்களுக்கு எதிராக இருக்கும் வசனங்களை /பொய் பிரசாரங்களை கண்டுபிடித்து தணிக்கை செய்ய அறிவில்லாத ,துப்பில்லாத தணிக்கை துறைதான் முதல் குற்றவாளி.அரசாங்க சம்பளத்தை வாங்கி பல வசதி வாய்ப்புகளோடு வாழும் தணிக்கை அதிகாரிகளுக்கு இந்த அறிவு கூட ஏன் இல்லாமல் போனது?
சரி படம் வந்துவிட்டது.
படத்தில் சர்ச்சை கூறிய காட்சிகள் இருந்தால் நீக்க சொல்லலாம். வழக்கு பதியலாம்.
ஆனால் தடை செய்யும் அளவிற்கு சர்க்கார் ஒன்றும் புரட்சி காவியம் அல்ல.அது ஒரு வெத்து பட்டாசு.
படம் காட்சிகள் நீக்கப்பட்டு ஓட வேண்டும்.முருகதாஸ் சட்டப்படி தண்டிக்க பட வேண்டும்.
துணிவிருந்தால் படத்திற்கு சான்று கொடுத்த தணிக்கை அதிகாரி மேல் அரசு ஒரு வழக்கு போடட்டும்.

இன்னொரு விஷயம் ...60 ஆண்டுகள் திராவிட அரசியலை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் விஜய்க்கு எதிராக அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளும் கோதாவில் இறங்கி இருக்க வேண்டும்.திமுக பக்கம் என்ன நடக்கிறது என்றுதான் தெரியவில்லை.
கள நிலவரம் ,இளைஞர்களின் பல்ஸ் தெரியாமல் வைகோ வேறு விஜய்க்கு ஆதரவு குரல் நீட்டுகிறார்.
அதிமுக முன்னெடுகிறது என்பதர்காக திமுகவின் பல கால ஆட்சிமேல் அவதூறு பரப்பி வரும் விஜய் மேல் கருணை கொள்ளுதல் தற்கொலைக்கு சமமானது.
இப்படியே அமைதி காத்து கொண்டிருந்தால் விஜய் ,கமல் ரஜினியை போல் பாஜகவின் C டீமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக