வெள்ளி, 9 நவம்பர், 2018

மூன்று வேளை சோறுதான் பெரிது என்பவன் முட்டாள் .. முத்தையா முரளிதரன் மீது மனோ கணேசன்

ibc.com :சிறிலங்காவின் முன்னாள் சுழல் பந்து
வீச்சாளர் முத்தையா முரளிதரன்
நாட்டு மக்களுக்கு ஜன நாயகத்தை விட மூன்றுவேளை உணவுதான் முக்கியம் என கூறியுள்ள நிலையில் பல்வேறுபட்ட தரப்பினரும் தமது எதிர்ப்பினைப் பதிந்து வருகின்றனர். அதன்படி நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் மனோ கணேசன் முத்தையா முரளிதரனை சமூக உணர்வற்ற முட்டாள் என மறைமுகமாக சாடியுள்ளார். ”மூன்று வேளை சாப்பாடு என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும்.” என தனது முக நூலில் பதிவு செய்துள்ளார். குறித்த கருத்திற்கு பல்வேறுபட்ட தரப்பினரும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன் முரளிதரன்மீது கண்டனங்களையும் பதிவுசெய்துவருகின்றனர். பிபிசி சிங்கள செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் முத்தையா முரளிதரன் தமிழ் மக்களை புண்படுத்தும் விதமாக கருத்து பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக