செவ்வாய், 27 நவம்பர், 2018

கூட்டணியில் யாருக்கெல்லாம் இடம்?!' - ஆதங்கப்பட்ட வைகோ; அறிக்கையை ஆராய்ந்த ஸ்டாலின்

`கூட்டணியில் யாருக்கெல்லாம் இடம்?!'  - ஆதங்கப்பட்ட வைகோ; அறிக்கையை ஆராய்ந்த ஸ்டாலின்.vikatan.com-ஆ.விஜயானந்த : துரைமுருகன் பேச்சு ஒருபுறம் இருந்தாலும், களநிலவரம் குறித்து ஸ்டாலின் கவனத்துக்கு விரிவான அறிக்கை ஒன்று சென்றுள்ளது. அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தகவல்களை ஆச்சர்யத்துடன் கவனித்திருக்கிறார் ஸ்டாலின்.
 `கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமோ என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்' என ஆதங்கத்தோடு பேட்டியளித்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. அந்தளவுக்கு துரைமுருகனின் பேட்டி, கூட்டணிக்குள் குழப்பத்தை வாரியிறைத்திருக்கிறது.' ஆனால், கூட்டணி குறித்து ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்ட அறிக்கைக்கும் துரைமுருகன் கருத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.
தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில், `காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகள் தி.மு.க-வுடன் கொள்கை அளவில் ஒத்துப்போயிருந்தாலும் அவை கூட்டணியில் இருப்பதாக அர்த்தம் இல்லை' எனப் பேசியிருந்தார். இதற்குப் பதில் அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், `கூட்டணி குறித்து >துரைமுருகன் கூறிய கருத்தை
தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது' எனப் பேசினார். துரைமுருகனின் கருத்து, திருமாவளவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

``காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, திருமாவளவன் டெல்லியில் சந்தித்துப் பேசியதில் இருந்தே கோபத்தில் இருக்கிறது தி.மு.க தலைமை. சில நாள்களுக்கு முன்பு பேசிய திருமாவும், `சிதம்பரத்தில் போட்டியிடுவேன்' எனக் கூறினார். இடத்தை ஒதுக்க வேண்டிய இடத்தில் இருப்பது தி.மு.க தான். அப்படியிருக்கும்போது, `நான் போட்டியிடுவேன்' என திருமா கூறியதை தி.மு.க நிர்வாகிகள் சிலர் துரைமுருகன்விரும்பவில்லை. `சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியாக உருவெடுத்து, தி.மு.கவைத் தோல்வி பாதைக்குத் தள்ளியவர்கள்' என்ற அடிப்படையில் தி.மு.கவில் உள்ள சிலர் ஸ்டாலினுக்குத் தவறான ஆலோசனைகளைக் கூறி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான் துரைமுருகன் பேச்சையும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இதனால் பா.ஜ.க-வுக்குத்தான் லாபம்" என்கின்றனர் வி.சி.க நிர்வாகிகள். 
துரைமுருகன் பேச்சு ஒருபுறம் இருந்தாலும், களநிலவரம் குறித்து ஸ்டாலின் கவனத்துக்கு விரிவான அறிக்கை ஒன்று சென்றுள்ளது. அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தகவல்களை ஆச்சர்யத்துடன் கவனித்திருக்கிறார் ஸ்டாலின். இதைப் பற்றி நம்மிடம் விவரித்த அறிவாலய நிர்வாகி ஒருவர், ``கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு 89 இடங்கள் கிடைத்தன. `எந்தெந்த தொகுதிகளில் தி.மு.க வென்றது; வாக்கு சதவீகிதம்; களநிலவரம்' ஆகியவற்றை ஆராய்ந்து இந்த அறிக்கை கொடுக்கப்பட்டது. அந்த அறிக்கையில், `கொங்கு வேளாளர் பகுதியில் மிக மோசமான தோல்வியை தழுவியிருக்கிறோம். ஜெயலலிதா இருக்கும்போதே, வன்னியர் பெல்ட்டில் பா.ம.க, வி.சி.க ஆகிய கட்சிகள் செல்வாக்காக இருக்கும் தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி 5.5 சதவீகித வாக்குகளோடு இருக்கிறது. அவர்கள் தினகரனுடன் அணி சேருவதால் நமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அ.தி.மு.க-வுடன் அவர்கள் போனாலும் அது பொருந்தாக் கூட்டணியாக மாறிவிடும். நம்முடன் அவர்கள் வந்தாலும், அதனால் எந்தவித லாபமும் இல்லை. காரணம், பா.ம.க-வும் வி.சி.க-வும் இல்லாமலேயே அவர்களது தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

ராமதாஸ்ஒருவேளை நம்மிடம் பா.ம.க வந்தாலும் 5.5 சதவீகித வாக்கு அளவுக்கு சீட் கேட்பார்கள். அது நமக்குத் தேவையில்லாத விஷயம். ஜெயலலிதா இருக்கும்போதே பா.ம.க-வுக்கு செல்வாக்கான தொகுதிகளில் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. குறிப்பாக, பெண்ணாகரத்தில் நமது வேட்பாளர் இன்பசேகரன் எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், வடஆற்காடு, தென்னாற்காடு, ஆரணி, அரக்கோணம் பகுதிகளிலும் நாம் அதிக சீட்டுகளில் வெற்றி பெற்றுள்ளோம். சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகளால் நமக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை. தினகரன் தனித்து நிற்பது போலத்தான் முடிவாகும். அதுவும், நமக்கு நன்மையில்தான் முடியும்.
ராமதாஸை எந்த அடிப்படையில் வேண்டாம் என்று சொல்கிறோமோ, அதே அடிப்படையில்தான் திருமாவளவனையும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அதாவது, 5.5 சதவீகித வாக்குகளை எடுத்த ராமதாஸும் வேண்டாம். 0.75 சதவீகித வாக்கு எடுத்த திருமாவும் வேண்டாம். வி.சி.கவுக்கு இனி இரண்டு சீட்டுகளையெல்லாம் கொடுக்க முடியாது. இவர்கள் இருவரும் வந்தால், அது அணியின் தன்மையை மாற்றிவிடும். சிதம்பரம் தொகுதிக்கு மட்டும் சம்மதித்தால் கடைசி நேரத்தில் திருமாவளவனை பரிசீலிக்கலாம். மேலும், கொங்கு மண்டலத்தில் வெற்றி பெறுவதற்கு, வரக்கூடிய தேர்தலில் கோவை ஈ.ஆர்.ஈஸ்வரன் போன்றவர்களைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக