புதன், 28 நவம்பர், 2018

இளையராஜா : என் பாடலை இலவசமாக பாடினால் ராயல்டி கொடுக்க வேண்டிதில்லை .. காசு வாங்கினால் கட்டாயம் ராயல்டி தரவேண்டும்... விடியோ


nakkheeran.in கமல்குமார் :   தற்போது வெளியான ஒரு வீடியோவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்,
;இசைக்கலைஞர்களே ஒரு புதிய அறிவிப்பு, என்னுடைய பாடல்களை என் முன் அனுமதியில்லாமல் பாட விரும்பும் இசைக்கலைஞர்கள் என்னிடம் முன் அனுமதி பெற்று அதற்குரிய விஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன்பின் பாடவேண்டும். இல்லையென்றால் அது சட்டப்படி குற்றமாகும். அப்படி செய்வது தவறு என்பதை நீங்கள் உணரவேண்டும்.
அப்படி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை ஐ.பி.ஆர்.எஸ். -இல் நான் உறுப்பினராக இருந்தேன். இப்போது ஐ.பி.ஆர்.எஸ். இல் உறுப்பினராக இல்லாத காரணத்தால், இதுவரை என் சார்பாக வசூலித்து வந்த ராயல்டி தொகையை இனி தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் வசூலிக்கும்.
நான் அவர்களுக்கு அந்த உரிமையை வழங்கி இருக்கிறேன். எல்லாரும் இந்த விஷயத்தை சரியாக புரிந்துகொள்ள, நீங்கள் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்யவில்லை என்பதை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் வாங்குகின்ற பணத்திற்குதான் ராயல்டி தொகையே தவிர, நீங்கள் பாடுகிற பாடலுக்கு ராயல்டி தொகை இல்லை.
நீங்கள் பாடுவது இலவசமாக பாடினால், இலவசமாக பாடி விடலாம், பணம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.
இதை சரியாக புரிந்துகொள்ளுங்கள், இது ஒரு சின்ன விஷயம். பணம் வாங்குகிறீர்கள் அல்லவா, சும்மாவா கச்சேரி செய்கிறீர்கள். என் பாட்டிற்கு நீ பணம் வாங்குகிறீர்கள், அந்த பணத்தில் எனக்கு பங்கு இல்லையா?
 பாட்டே எனது என்றபோது, பங்கு எப்படி எனது இல்லாமல் போகும்?
 பங்கு என்ன ஒரு சின்ன தொகை, ஒரு பேருக்குதான கேக்குறது சட்டப்படி இருக்கணும் அப்படிங்கிறதுக்காக. நாளை வருகிற தலைமுறைக்கு இது ஒரு பெரிய நடவடிக்கையாக இருக்கும்,
முன்னோட்டமாக, முதலடி எடுத்து வைத்ததாக ஆகும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஏற்கனவே எகோ என்ற நிறுவனத்தினுடனான பிரச்சனை, இளையராஜா பெயரில் நடைபெற்ற வானொலி நிறுவனத்தை நிறுத்தியது என கடந்த சில வருடங்களாக தன் பாடல்கள் மீதான காப்புரிமையில் மிக கவனமாக இருக்கிறார், இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக