வெள்ளி, 30 நவம்பர், 2018

ஐஜி பொன் மாணிக்கவேல் ஒருவருடம் பணி நீட்டிப்பு

THE HINDU TAMIL " நீதிமன்றம் அளித்த பணி நீட்டிப்பை திறம்படச் செயலாற்றி ஓராண்டில் அனைத்துப் பணிகளையும் முடிப்பேன், சம்பளமே இல்லாவிட்டாலும் பணியாற்றுவேன் என ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
பணி நீட்டிப்புக்குப் பின் சென்னையில் செய்தியாளர்களிடம் பொன் மாணிக்கவேல் கூறியதாவது:
;நீதிமன்றத் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மிகுந்த சந்தோஷம். இதே பணியைச் செய்ய மீண்டும் ஒருவருடம் நீட்டித்துத் தந்துள்ளனர். முன்பு கடுமையாக இரவு பகலாக வேலை பார்த்தோம். இப்போது உறுதியாக வேலை பார்த்து கொண்டுவரப்படவேண்டிய சிலைகளை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்துவோம். மேற்கொண்டு துறைக்கும், அரசாங்கத்துக்கும், நீதிமன்றத்துக்கும் எங்களுடைய பணிவரனுக்கும் மேலாக சிறப்பாகப் பணியாற்றி பெருமை சேர்ப்போம். எள்ளளவும் எங்களால்  யாருக்கும் எந்த நேரமும் சிறுமை வராது. ஒன்றுமே இல்லையென்றாலும் வேலை பார்க்கத் தயார்.

பணி ஓய்வு நேரத்தில் கிடைத்த இந்த நீட்டிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தனிப்பட்ட முறையில் இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. துறை ரீதியாக கூடுதல் பொறுப்பைத் தந்துள்ளனர். ஏற்கெனவே ஒரு ஆண்டு 4 மாதம் நான் வேலை செய்துள்ளேன். ரயில்வேயில் ஐஜியாக இருக்கேன். கூடுதலாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவைக் கொடுத்தனர். அதற்கான ஊதியத்தை நான் பெறவில்லை.
ரயில்வே சம்பளத்தை மட்டுமே பெற்றுள்ளேன். தற்போது ஓய்வு பெற்றுள்ளேன். இப்போது கூடுதலாக பணி நீட்டிப்பு கொடுத்துள்ளனர். இதை எந்த அளவுக்கு அதிகபடசமாக செயல்பட முடியுமோ அந்த அளவுக்கு செயல்படுவேன். நல்ல அதிகாரிகளை வைத்து சிறப்பாகச் செயல்படுவேன்.
இதே அதிகாரிகள் அனைவரும் இருப்பார்களா? எப்படி விசாரணை நடக்கும்?
கண்டிப்பாக. எனக்குக் கீழ் உள்ள அதிகாரிகளை எள்ளளவும் மாற்ற நான் விடமாட்டேன். நிச்சயமாக அந்த டீம் இருக்கும். அந்த டீமுக்கு எந்தவித பாதகமும் வராது. விட்டுக்கொடுக்க மாட்டேன். முழுக்க முழுக்க பொறுப்பை நான் எடுத்துக்கொண்டு டீம் வேலை செய்யும். நாங்கள் அரசுக்காகத்தான் வேலை பார்க்கிறோம். லேசாக அதில் இடையூறு வந்தால் அதைச் சும்மா விடமாட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக