திங்கள், 19 நவம்பர், 2018

ஒகி புயலில் மீனவர்களை கைவிட்ட அரசு கஜா புயலில் டெல்டா விவசாயிகளை கைவிட்டு இருக்கிறது .

Devi Somasundaram : தமிழ் நாட்டில் மத்திய அரசுக்கு அதிக வருவாயை தர கூடிய பகுதியாக கடல் பகுதியும், எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற வளஙகளை தன்னகத்தே கொண்ட டெல்டா மாவட்டங்களும் தான்...
ஒகி புயலின் போது கடல் சார் பகுதிக்கு எந்த முன் அறிவிப்பும் செய்யாமல் மீனவர்கள் புயலில் சிக்கி பிணமாய் கடலில் மிதக்க விட்டது இந்த மத்திய மாநில அரசுகள் .
கடல் பகுதியில் இருந்து மீனவர்களை அப்புறபடுத்தி , அவற்றை தன் வசபடுத்தி கையகபடுத்த எடுத்த பல வழிகளில் அதுவும் ஒன்று..மத்திய ,மாநில அரசுகள் சேர்ந்து நடத்திய படுகொலை தான் ஓகி புயலால் நடந்தது.. அந்த மரணத்தின் போது நிர்மலா சீதாராமன் நடந்து கொண்ட முறை நாம் அறிந்ததே.
தற்பொழுது டெல்டா மாவட்டம் புயலால் தாக்கபட்டு சேதம் அடைந்து வாழ்வாதாரதிற்கு போராடுகிறது.. ஒகி புயலில் மீனவர்களை கைவிட்ட அரசு கஜா புயலில் டெல்டா விவசாயிகளை கைவிட்டு இருக்கிறது .
குடினீர் இல்லை,மின்சாரம் இல்லை, உணவு இல்லை, விளை நிலஙகள், தோப்புகள் முற்றிலும் அழிந்து வாழ்வின் கடைசி நிலையில் நிற்கிறார்கள் டெல்டா மக்கள் .இப்பவும் மத்திய, மாநில அரசுகள் மவுனம் காக்கின்றது .
தமிழ் நாட்டில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் மதிப்பு 300 லட்சம் கோடி என்று சொல்ல படுகிறது . அவற்றை ஏற்றுமதி செய்ய கடல் வழி மத்திய அரசுகை களுக்குள் இருக்கனும்..ஏற்கனவே டெல்டா மாவட்டம் ஓ என் ஜீ சி கட்டுபாட்டுகுள் வந்து விட்டது..
விரைவில் தமிழகத்தை மிலிடெரி டெரிட்டேரியலா அறிவிக்கப் போவதாக சில தகவல்க்ள் உலவுது .
ராணுவ விமானங்கள் வந்து இறங்கும் வசதியுடன் கூடியதுதான் எட்டு வழி பசுமைச்சாலை இப்போது இது பண்ணிரண்டு வழி சாலையாக மாற்றப் பட்டுள்ளது.....

தஞ்சை To கோவை பண்னிரெண்டு வழிச்சாலைக்கான ஆய்வுகள் தொடங்கிவிட்டது....
இதுபோல் தமிழகத்தில் எட்டு சாலைகள் வருகிறது இதன் பெயர் பாரத் மாலா....
நியூட்ரினோ, கூடங்குளம் செரிவூட்டப்பட்ட புளுடோனியம் மற்றும் அனுகுண்டோகள்..
கஞ்சமலை இரும்பு, சேர்வராயன் மலை ஜிப்சம், தஞ்சை டெல்டா பெட்ரோல்,
இவைகளை இந்தியம் பெருங்கடலுக்கு கொண்டு சேர்க்கும் சாலைதான் பாரத் மாலா...என்று சொல்லபடுகிறது ..
இறுநூறு சிறிய மற்றும் பெரிய துறைமுகங்கள் வழியாக நமது இயற்கைவள இறையான்மையை கொண்டு செல்வார்கள் இதன் பெயர் பாரத் மாலா...
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பே சீனா முத்து மாலை என்கின்ற பெயரில் கொண்டு வந்த திட்டம்தான் இது....
மூழ்கிக் கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த, தமிழகத்தின் கணிமவளம், GST இதைத் தவிர இந்தியப் பொருளாதார முன்னேற்றத்திற்கு வேறு வழியே கிடையாது...
இந்தியாவை காப்பாற்ற தமிழ் நாட்டை பலி தருகிறது மத்திய அரசு..அதற்கு தமிழ் நாட்டில் இருக்கும் மாநில அரசும் துணை போகிறது .
அதன் நீட்சி தான் கஜா பாதித்த டெல்டா மாவட்டம் கண்டு கொள்ளாமல் புறக்கணிக்க படுவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக