செவ்வாய், 20 நவம்பர், 2018

ஜப்பான் நிசான் கார் தயாரிப்பு நிறுவன தலைவர் கைது!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ‘நிசான்’ தலைவர் கைது!நியூஸ் 18 : கார்லஸ் கோஷ்ன் ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ‘நிசான்’ தலைவராக இருக்கும் கார்லோஸ் கோஷ்ன், நிதி முறைகேடு புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
 ஜப்பானைச் சேர்ந்த கார் நிறுவனம் நிசான். குறுகிய காலத்தில் மோட்டார் வாகனச் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்த இந்நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் கார்லோஸ் கோஷ்ன். நிதி முறைகேடு மற்றும் வருமானத்தை குறைத்து காட்டியதாக எழுந்த புகாரில் ஜப்பான் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிந்த நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார்லஸ் கோஷ்ன் மற்றும் இயக்குநராக உள்ள கிரேக் கெல்லியும் நீண்ட நாட்களாக முறைகேடு செய்து வந்ததாகவும், இதனை அடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோஷ்ன் விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நிசான் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.>
மோட்டார் வாகனத்துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கோஷ்ன், வாகன டயர்கள் தயாரிக்கும் தொழிலை தொடங்கி, பின்னர் படிப்படியாக மேலேறி 1996-ம் ஆண்டில் ரெனால்ட் நிறுவனத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக