திங்கள், 12 நவம்பர், 2018

அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு

எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்புமாலைமலர் : உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2382 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தகவல் அறியும் சுதந்திரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அங்கு வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளிக்கும் விவகாரத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அண்டை நாடான மெக்சிகோ நாட்டு எல்லை வழியாக அமெரிக்காவில் அடைக்கலம் தேடிவரும் மக்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்நிலையில், உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக  2382 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள 86 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக  தகவல் அறியும் சுதந்திரத்தின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

வடஅமெரிக்காவில் வாழும் பஞ்சாபிகள் சங்கம் மூலம் பெறப்பட்ட இந்த தகவலின் அடிப்படையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். சொந்த நாட்டில் வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு பயந்து இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் தஞ்சம் அடைய வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

30 முதல் 35 லட்சம் ரூபாய் கொடுத்தால் அமெரிக்க குடியுரிமை பெற்று தருவதாக போலி வாக்குறுதி அளிக்கும் சில தரகர்களின் மாயவலையில் விழும் இந்தியர்கள் இங்கு அடைக்கலம் தேடிவந்து குடியுரிமைத்துறை அதிகாரிகளிடன் பிடிபட்டு, சிறையில் அடைபட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக