ஞாயிறு, 28 அக்டோபர், 2018

ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பு .Ranil meets U S, U K , EU, Indian, Japan, Canada and Australian.....

.asianmirror.lk :  Over 20 foreign diplomats are currently participating in a meeting with UNP Leader Ranil Wickremasinghe and his Chief of Staff Sagala Ratnayaka at Temple Trees.
Wickremesinghe, starting the meeting, has explained the current political situation to the diplomats saying he is still the constitutionally appointed Prime Minister.
The UNP leader has made it clear that he commands the majority support in Parliament. "That's why we have repeatedly asked President Sirisena to convene Parliament," Wickremesinghe has stated.
Diplomats from the United States, the United Kingdom, EU, Indian, Japan, Canada and Australian were among the delegation meeting the UNP leader.
International pressure has already piled on President Maithripala Sirisena to uphold democracy and act in accordance with the constitution.
The US State Department has stated that it is following the developments in Sri Lanka and requested the Sri Lankan political authorities to follow the due process.
The State Department has also made it clear that the Sri Lankan government should uphold its 'Geneva commitments' to human rights, accountability, justice and reconciliation.
The European Union has also urged the Sri Lankan authorities to ensure the rule of law and abide by the constitution.

மின்னம்பலம் : இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு புதிய பிரதமராக ராஜபக்‌ஷே நேற்று நியமிக்கப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் எதிரொலித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

அமெரிக்க அரசியல் விவகாரத்துறையின் தெற்கு, மத்திய ஆசியப் பிரிவின் சார்பில் இந்திய நேரப்படி அக்டோபர் 27 ஆம் தேதி அதிகாலை 1.34 மணிக்கு ட்விட் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
‘’இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்களை உற்று கவனித்து வருகிறோம். இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினருக்கும், பொறுப்புள்ள பதவிகளில் இருக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் நாங்கள் ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். அனைவரும் உங்கள் நாட்டு அரசியல் அமைப்பை மதித்து நடந்துகொள்ளுங்கள். அரசியல் சாசனம் வகுத்த நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்.
இலங்கை அரசு ஜெனிவா ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி மனித உரிமை, சீர்திருத்தம், பொறுப்புத் தன்மை, நீதி, மறுவாழ்வு ஆகியவற்றின் மீதான தனது கடமைகளை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து நாட்டின் ஆசிய பசிபிக் நாடுகளின் அரசியல் விவகாரத் துறை அமைச்சர் மார்ம் ஃபீல்டும் இதே ரீதியில் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர், ‘இலங்கையில் நடக்கும் அரசியல் மாற்றங்களை அக்கறையோடு கவனித்து வருகிறோம். இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அந்நாட்டின் அரசியல் சாசனத்தை மதிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
இதோடு இங்கிலாந்து தன் நாட்டில் இருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. “இலங்கையில் அதிரடி அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால் அந்நாட்டுக்கு செல்லும் இங்கிலாந்து நாட்டவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும். அரசியல் ரீதியான போராட்டங்கள், பேரணிகள் நடக்கும்பட்சத்தில் அதைத் தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறது இங்கிலாந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக