புதன், 31 அக்டோபர், 2018

ஆட்கள்" தேவை... நிர்மலாதேவியிடம் கேட்ட கருப்பசாமி... யாருக்காக அது யாருக்காக?? R

கருப்பசாமியும் tamil.oneindia.com//lakshmi-priya :சென்னை: சென்னைக்கு மாணவிகளை அனுப்புமாறு கருப்பசாமி வலியுறுத்தியதாக நிர்மலா தேவி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ள நிலையில் அவர் யாருக்காக இத்தனை மாணவிகளை கேட்டார் என்ற கேள்வி எழுகிறது.
அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி மாணவிகளை மதுரை பல்கலைக்கழகம் அதிகாரிகளுடன் படுக்கைக்கு செல்லுமாறு பேராசிரியை நிர்மலா தேவி அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன்படி நிர்மலா தேவி கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

சொல்லவே இல்லை? அப்போது நிர்மலா தேவி அவர்களிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் யார் யார் பெயரோ இந்த மாபாதக செயலுக்கு சொல்லப்பட்ட நிலையிலும் இந்த வாக்குமூலத்தில் மாணவிகளை யாருக்காக சப்ளை செய்ய கோரப்பட்டது என்பதில் உண்மையை அவர் 99 சதவீதம் சொல்லவே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

கருப்பசாமியும்? முதலில் முருகன் தனது பெண் வருவாரா என அழைத்தார். அதற்கு நான் அவர் வரமாட்டார் என்றேன். உடனே கல்லூரி மாணவிகளை அழைத்து வர முடியுமா என கேட்டார். இதே போல் கருப்பசாமியும் வலியுறுத்தியதாக கூறியுள்ளார் நிர்மலா தேவி. சாராம்சம் என்ன? இந்த வாக்குமூலத்தில் நிர்மலா தேவி யார் எப்படிப்பட்டவர் என்பது குறித்த விவரமும், அவர் யாருடன் எல்லாம் தொடர்பு வைத்திருந்தார் என்ற விவரங்கள் மட்டும் தான் சொல்லப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் சாராம்சமே கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்ததுதான். ஆனால் அது யார் சொல்லி தான் செய்தேன் என்பதை நிர்மலா சொல்லவில்லை. மாறாக எல்லாவற்றையும் கருப்பசாமி மற்றும் முருகனுக்காகத்தான் செய்தேன் என்றார்.

 ஏன் சென்னைக்கு? எனினும் நிர்மலா தேவியின் வாக்குமூலத்தில் ஒரு சிறிய துப்பு கிடைத்துள்ளது. அதாவது கருப்பசாமி நிர்மலா தேவியிடம் பேசிய போது அடுத்த வாரம் சென்னைக்கு செல்வதால் கல்லூரி மாணவிகளை ரெடி செய்து தருவீர்களா என கேட்டதாக நிர்மலா வாக்குமூலத்தில் கூறியுள்ளார். முருகனும், கருப்பசாமியும் இருப்பது மதுரையில், அவர்களுக்காக மாணவிகளை அவர்கள் கேட்டிருந்தால் அவர்களை ஏன் சென்னைக்கு அனுப்ப தயார் செய்ய சொல்ல வேண்டும்.

கேள்வி ..இவர்கள் இருவருக்காக இத்தனை பெண்களை கேட்பது என்பது சாத்தியமில்லை. அப்படியென்றால் சென்னையில் யாருக்காக இந்த பெண்கள் கொத்து கொத்தாக அழைத்து செல்ல திட்டமிடப்பட்டனர். இதுதானே வழக்கின் திருப்பம். இதைதானே கண்டுபிடிக்க வேண்டும். எனவே மாணவிகளை சென்னைக்கு வரவழைக்க சொன்னது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக