புதன், 31 அக்டோபர், 2018

குடியேற்றவாசிகளின் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடையாது? என் ஆர் ஐக்களின் வயிற்றில் புளியை கரைத்த டொனல்ட் ட்ரம்ப்

குழந்தைகளுக்குக் குடியுரிமை: ட்ரம்பின் புதிய திட்டம்!அமெரிக்காவில் வசிக்கும் ஏராளமான் இந்தியர்கள் குடியரசு தேர்தலில் டானல்ட் ட்ரம்ப்யே ஆதரித்தனர் . அதற்கு கைமேல் பலன் . அவர்களுக்கு பிறக்கும் போகும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கொடுப்பது முறை அல்ல என்று அவர் ஆலோசிக்கிராராம்.  . மின்னம்பலம்: அமெரிக்காவில் பிறக்கும் குடியேறிகளின் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.
ஹெச்பிஓ தொலைக்காட்சியின் ஆக்சியாஸ் ஆன் ஹெச்பிஓ நிகழ்ச்சியில் ட்ரம்ப் அளித்த பேட்டியில், “மற்ற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் வசிப்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, எங்கள் நாட்டின் சார்பில் குடியுரிமை வழங்கப்படும். அபத்தமான இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இந்த முடிவு குறித்து வெள்ளை மாளிகை வழக்கறிஞர்கள் பரீசிலனை செய்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த உத்தரவு எப்போது விதிக்கப்படும் என்ற தகவலை ட்ரம்ப் உறுதியாகக் கூறவில்லை.

அமெரிக்க அரசியலைப்பு சட்ட 14ஆவது திருத்தத்தின்படி, அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான முழு உரிமை உள்ளது. அதன்படி, தற்காலிக விசா அல்லது முறையான விசா இல்லாமல் அமெரிக்காவில் உள்ளவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்கூட அமெரிக்க குடிமக்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபராகப் பதவி ஏற்றதிலிருந்து குடியேறிகள் தொடர்பான சட்டங்களில் பல கடுமையான திருத்தங்களை ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக