ஞாயிறு, 21 அக்டோபர், 2018

சர்கார் படக்கதை உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரனின் கதை . திருட்டு கதைக்கு எதிராக போர்க்கொடி!

சினி டிஜிட்டல் திண்ணை: சர்கார் அஃபீஷியல் திருட்டு!
மின்னம்பலம் :“சர்கார் படத்தினுடைய பாடல்கள் மற்றும் டீசரைப் பார்த்ததும், ‘இந்தக் கதை என்னுடையது. இதை முறைப்படி திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன்’ எனக் கொடி பிடித்து உரக்க குரல் எழுப்பியிருக்கார் வருண் ராஜேந்திரன். இவர் வேறு யாரும் இல்லை. பொக்கிஷம், சுக்ரன், கலைஞர் கதை வசனம் எழுதிய பெண் சிங்கம் ஆகிய படத்துல எல்லாம் உதவி இயக்குநரா வேலை செய்தவர். விஜய் நடிச்ச சுக்ரன் படத்துல வேலை செய்றதுக்கு முன்னாலயே இந்தக் கதையை எஸ்.ஏ.சந்திரசேகர்கிட்ட சொல்லியிருக்கார். இந்தப் படத்தை விஜய்யை வெச்சே பண்ணலாம், நீ ரொம்ப பக்கத்துல இருந்து அவரை கவனிச்சு சீன் கிரியேட் பண்ணுன்னு சொல்லி, சுக்ரன் படத்துல அசிஸ்டண்டா வேலைக்குச் சேர்த்துவிட்டிருக்கார் எஸ்ஏசி. அவரும் விஜய்க்கு ஏத்த மாதிரி எல்லாம் செய்து செங்கோல் என்ற தலைப்பில் திரைக்கதை, வசனமும் எழுதி முறைப்படி திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் பதிவு செய்திருக்கார். பல புரொடக்‌ஷன் கம்பெனிக்குப் போனபோது வாய்ப்பு கிடைக்கல. தனிப்பட்ட முறையில செங்கோல் கதையைக் கேட்டவங்க பட்டியலில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொடங்கி மகேஷ் பாபு வரைக்கும் போகுது. சேரன் கிட்ட கதை சொல்லி பொக்கிஷம் படத்துலயும் வேலை செய்திருக்கார். ஆனால், அந்தப் படம் டிராப் ஆனதால இதைப் படமாக்க முடியலை. இவரோட செங்கோல் கதை பற்றி கேள்விப்பட்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸோட தனிப்பட்ட போட்டோகிராபர் ‘நான் உங்களுக்குக் கதை சொல்ல வாய்ப்பு வாங்கித் தர்றேன்’னு சொல்லி செங்கோல் ஸ்கிரிப்ட் புக்கை வாங்கிட்டு போனதா சொல்றாங்க. அதன் பிறகும் எதுவும் நடக்காத சமயத்துல, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உறவினரான பாஸ் என்கிற பாஸ்கரன் கிட்டேயும் இந்தக்கதைப் போயிருக்கு. பாண்டிச்சேரியில் கதை டிஸ்கஷன் நடந்தபோதே, கட்சித் தலைமைக்குத் தெரிஞ்சு கூண்டோட கிளியர் பண்ணி இனியும் இந்த ஆசையெல்லாம் வரக் கூடாதுன்னு கடுமையா எச்சரித்து அனுப்பியிருக்காங்க” எனச் சொல்லி சென்ட் கொடுத்தது வாட்ஸ் அப். அந்தப் பதிவை காப்பி, பேஸ்ட் செய்து, அதனுடன் தான் டைப் செய்து வைத்திருந்த தகவலையும் ஷேர் செய்தது ஃபேஸ்புக். அதில் குறிப்பிட்டிருந்தது இதுதான்.

“சர்கார் ஆடியோ, டீசர் வெளியான பின்னால என் செங்கோல் கதைதான் சர்கார் படத்தின் கதை என திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் ஒன்பது பக்க புகார் மனு கொடுத்தார் வருண் ராஜேந்திரன். புகாரைத் தீர விசாரிச்ச எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ், ‘செங்கோல் கதை தான் சர்கார் கதை’ என ஒருமனதா முடிவெடுத்திருக்கார். ஆனால், அந்த முடிவை அதிகாரபூர்வமா அறிவிக்கவிடாமல் எழுத்தாளர்கள் சங்கத்துக்குள்ளாகவே தடுக்கும் முயற்சிகள் நடைபெற்றதா உதவி இயக்குநர்கள் தரப்பில் கூறப்படுது. ‘நாளைக்கு ஒரு பிரச்சினைன்னா நான் தான் பதில் சொல்லணும்’ என மற்றவர்களை வாயடைக்க வைத்து, அத்தனை எதிர்ப்புகளையும் கடந்து வருண் ராஜேந்திரனுக்கு பாக்யராஜ் எழுத்துபூர்வமாக ஏழு பக்கக் கடிதம் கொடுத்தே விட்டாராம். சட்ட ரீதியான நடவடிக்கையை வருண் ராஜேந்திரன் தொடங்கி இருப்பதா சர்கார் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் புதன்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருப்பதா வருண் தரப்பில் கூறப்படுது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குநரா அறிமுகமான தீனா படம் தொடங்கி அவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்களின் கதைகளும் அடுத்தவர் கதை அல்லது ஹாலிவுட் படங்களின் தழுவல் எனத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. தற்போது சர்கார் படத்தின் கதையும் அதே போல குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கு. அதுவும் ஆதாரபூர்வமாக. என்ன சொல்லப் போகிறார் முருகதாஸ் என்பது தான் சர்கார் ரிலீஸாவதற்குள்ளாக நடைபெறப் போகும் பிரச்சினைகளின் க்ளைமாக்ஸ் அப்படின்னு தமிழ் சினிமா காத்துக்கிட்டு இருக்கும் நிலையில், முருகதாஸைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து இந்தப் பிரச்சினை பற்றி ஒருவர் கேட்டிருக்கார். எழுத்துலகில் ரொம்ப மதிக்கப்படக்கூடியவர் என்பதாலும், அதிகாரத்தில் இருக்கவர் என்பதாலும் முருகதாஸ் பதில் சொல்லியிருக்காராம். ‘என் கதைக்கு இன்ஸ்பிரேஷனா அமைஞ்சது நடிகர் திலகம் தான். அவர் வாக்கை தான் கள்ள ஓட்டு போட்டாங்க. அதில் இருந்துதான் நான் இந்தக் கதையை இன்னிக்கு ஏத்தமாதிரி மாத்தியிருக்கேன்’ என்று முருகதாஸ் கூறியதற்கு, வருண் கொடுத்த ஸ்கிரிப்ட் புக்கையும் காட்டி ‘நடிகர் திலகத்துக்கு நடந்ததுல மாற்றம் செய்த மாதிரி, இந்த ஸ்கிரிப்டுக்கும், உங்க கதைக்கும் மாற்றம் செய்திருக்கலாமே. அதெப்படி 99% ஒரே மாதிரி இருக்கு?’ என்று நேராகவே கேட்டதுடன் இரண்டிலும் இருக்கும் ‘ஒரு விரல் புரட்சி’ ஒற்றுமையையும் சுட்டிக் காட்டியிருக்கார். சீக்கிரம் இந்தப் பிரச்சினையை முடிக்கப்பாருங்க என்ற கட்டளையுடன் விடைபெற்ற முருகதாஸுக்கு ‘கதை’ என்ற இடத்தில் வருண் ராஜேந்திரன் பெயரைப் போடணும் அப்படி இல்லைன்னா கோர்ட்ல இந்த வழக்கைச் சந்திக்கலாம்’ ஆகிய இரண்டு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்காம்” என்று ஃபேஸ்புக் போட்ட பதிவை ஷேர் செய்துவிட்டு வாட்ஸ் அப் இன்னொரு தகவலையும் அனுப்பியது.
“ ‘15 நாட்களுக்கு முன்னாடியே ஷூட்டிங்கை முடிச்சிட்டாங்க’ என ரஜினி போட்ட ட்வீட் உண்மை இல்லையாம். 24ஆம் தேதி முடியுறதா இருந்த ஷூட்டிங்கை இரவு, பகல் பார்க்காம நடிச்சுக்கொடுத்து ஐந்து நாட்கள் முன்னாலயே முடிச்சிருக்கார் ரஜினி. அப்பவும் இந்தத் தகவலை வெளிய சொல்ற ஐடியாவே இல்லையாம். சன் பிக்சர்ஸ் டீமின் சர்கார் அப்டேட்டை, லைகா 2.0 அப்டேட்டால ஓவர்டேக் பண்ண நினைச்சப்ப எப்படியும் எங்க படம்தான் டிரெண்டிங்ல இருக்கணும் என நினைத்த சன் பிக்சர்ஸ் புரமோஷன் டீம் திடீர்னு ரஜினிகிட்ட ட்வீட் போடச்சொல்லி கோரிக்கை வைச்சிருக்கு. பேட்ட படத்துல சீரியஸா இருந்ததால பொது வாழ்க்கைல இருந்து விலகியிருந்த ரஜினி பேட்ட ட்வீட் போட ஸ்டார்ட் பண்ணதும் எல்லா மேட்டருக்கும் கருத்து சொல்லத் தொடங்கிட்டாரு. அடுத்த சில நாட்களுக்கு இது தொடரும் என்பதால், ஷூட்டிங்குக்காக நிறுத்தி வைத்திருந்த கட்சி வேலைகளைத் தொண்டர்கள் மறுபடியும் கைல எடுத்துட்டாங்களாம்’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக