சனி, 20 அக்டோபர், 2018

நடிகர் சிவகுமார் எச்சரிக்கை : சபரிமலைக்கு பெண்கள் போனால் விளைவுகளை சந்திக்க நேரிடும் ..

ஐயப்பனை சபரிமலை கோயிலுக்கு சென்று வணங்க விரும்பினால் நிச்சயமாக விளைவுகளை சந்திக்க நேரிடும் . மக்கள் கோபமாக இருக்கிறார்கள் என நடிகர் சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தினமணி: வடபழனியில் திரைப்பட பாடல்பதிவு நிலையத்தை திறந்து வைத்த பிறகு பேசிய அவர், பெண்கள் விசேஷ நாட்கள் தவிர்த்து பிற நாட்களில் சபரிமலைக்கு செல்லலாம் எனக் கூறியுள்ளார்.
சென்னை: பைத்தியம் பிடித்தது போல் ஐயப்பன் கோவிலுக்குச் செல்கிறார்கள் என்று பெண்கள் மீது நடிகர்  சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசனம் செய்யயச் சென்ற இரண்டு பெண்கள் வெள்ளியன்று திருப்பி அனுப்பப்பட்டனர்,. இதன் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் பைத்தியம் பிடித்தது போல் ஐயப்பன் கோவிலுக்குச் செல்கிறார்கள் என்று பெண்கள் மீது நடிகர்  சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் சபரிமலை விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

ஏன் கடவுள்களை வீட்டிலேயே வணங்கிக் கொள்ளக் கூடாதா? ஐயப்பனை அவர்கள் வீட்டிலேயே கும்பிடக் கூடாதா? முருகனை வீட்டிலேயே வணங்கினால் ஆகாதா?
கடவுள் நமபிக்கையுள்ள நான் கோவில்களுக்குப் போவதில்லை. ஆனால் வணங்குவதற்காக  எல்லா கடவுள்களின் படங்களும் என் வீட்டில் உள்ளது. 
பெண்கள் ஏதோ பைத்தியம் பிடித்தது போல் ஐயப்பன் கோவிலுக்குச் செல்கிறார்கள். அப்படி பிடிவாதம் பிடிப்பது ஏன்?
அப்படிப் போக வேண்டும் என்று விரும்பினால், உச்ச நீதிமன்றம் அனுமதியளித்து அரசும் உதவும் பட்சத்தில் ஏதேனும் விடுமுறை நாட்களில் போய் பார்த்து விட்டு வரலாம். அப்படி இல்லாமல் கூட்டத்தோடு போவேன் என்று கூறினால் அதற்கான பின்விளைவுகளை சந்தித்துதான் ஆக வேண்டும். 
மக்கள் மிகவும் கோபமாக இருக்கிறாரகள். அதனை சபரிமலைக்குப் போக விரும்பும் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக