செவ்வாய், 30 அக்டோபர், 2018

சர்க்கார் கதை திருட்டை முருகதாஸ் ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்க ...

ஆலஞ்சியார்  :அறிவு திருடர்கள்.. அடுத்தவரின் ஆக்கத்தை அறிவை ப்பார்கள் .. தங்களை நல்லவராக காட்டிக்கொள்வார்கள் .. இவர்கள் புகழ் உச்சிக்கு செல்ல எதைவேண்டுமானாலும் செய்ய தயங்காதவர்கள் இப்போது சமூகவலைத்தளங்கள் மக்கள் கையில் இருக்கிற ஒருநொடியில் அதுகுறித்த முழு விளக்கத்தையும் பெற முடிகிற காலகட்டத்தில் கூட இந்த திருடர்கள் தங்களை நியாயபடுத்துவது தான் வேடிக்கையாக இருக்கிறது முன்பெல்லாம் மேலைநாட்டி அறிவியலை .. அறிவை கருத்தை இலக்கியத்தை மேம்பூசாச பூசி நமக்கு தந்தவர்கள் உண்டு .. இலக்கிய சுவடுகளை திருடி தன்னால் தான் ஆகிற்றென்றவரும் உண்டு .. நிறைய கதைகளை களவாடி தங்கள் பெயர்களில் வரவு வைத்த மேதைகள் உண்டு சுய சிந்தனை வறண்டு போனவர்கள் புதியதொரு கருத்தை விதைக்க தெரியாதவர்கள் ஒரு படைப்பை உருவாக்க தெரியாதவர்கள் அவசரகதியில் சமைக்கவேண்டிய நிர்பந்தத்தில் அடுத்தவன் சரக்கை உறிஞ்ச பார்ப்பார்கள் ..

..
தனக்கிருக்கிற புகழை தக்கவைக்க அடுத்தவரை துணைக்கொண்டு வெற்றியை ஈட்ட நினைக்கிறவர்கள் சினிமாகாரர்கள் .. ஒருவரி கதையை முழுவடிவம் தர அங்கே கூட்டாக அமர்ந்து ஆலோசித்து செதுக்கிய பிறகு கதை திரைக்கதை என தன் பெயரை போட்டுக்கொள்வதே அயோக்கியத்தனம் தான்..
அதற்கு சப்பை கட்டுகிறவர்கள் அறிவை நீங்கள் சோதித்தால் .. திராவிட வரலாற்றை கலைஞர் இல்லாமல் எழுதிவிட முடியும் எம்ஜிஆரை விட்டுவிட்டு எழுதிவிட முடியாது என்கிற அபார அறிவாளிகள்..? தான் .. பொய் பித்தலாட்டம் பேத்தல் இவைதான் இலக்கியமென்றும் அதுதான் எழுத்தென்று நம்புகிற கயமை ..
அறிவு திருடர்களாக தான் இருப்பார்கள் ..
மிகப் பெரிய இயக்குனரென்பதே ஒருவகை பொய் .. சினிமா போன்ற பலரின் பங்களிப்பை தனதாக்க நினைக்கிற மோசடி செயலை நியாயபடுத்தியே வந்திருக்கிறோம் .. அதிலும் சார்வாள்களென்றால் மிக பெரிய ஆளுமைகளாக கட்டமைத்து துதிபாடியிருக்கிறோம் அதனால் தான் இன்னும் நிறைய பேர் தங்களின் படைப்பை தொலைத்துவிட்டு மௌனம் நகர்த்து போகிறார்கள்..
அங்கீகாரம் கிடைக்காமல் தெருவில் அலைகிறார்கள் ..
..
வருண் ராஜேந்திரனைப்போல போராடினால் மட்டுமே #சொங்கோல் கிடைக்கும்..

தனதென்பவன் மகா அயோக்கியன்.. அறிவின் வறட்சி அடுத்தவரின் அறிவை திருட சொல்கிறது .. அறிவுத் திருடர்கள் தங்களை திறமைசாலியென நம்பவைத்திருக்கிறார்கள் இலக்கிய திருடர்கள் நிறைய கண்டிருக்கிறோம் தனதென்று சொல்லி நம்பவைத்து பெயரும் புகழும் பணமும் சேர்த்தவர்கள் உண்டு மேட்டுக்குடி வாசனை அவர்களை காப்பாற்றியிருக்கிறது ..ஊடகங்கள் தூக்கி கொண்டாடியிருக்கிறது .. வரலாறு நெடுக இவ்வகை அறிவுத் திருடர்கள் ஆளும் வர்க்கத்தோடு அதிகாரவர்க்கத்தோடு தொடர்பில் இரு
அறிவுத் திருடர்கள் எச்சரிக்கை
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக