சனி, 13 அக்டோபர், 2018

கமலஹாசனின் கொள்கை: திமுக ஒழியணும் .. . இட ஒதுக்கீடு ஒழியணும்... நீட் நல்லது ..

Steephanraj Thirungannam : இலக்கற்ற பயணம் மாலுமி இல்லாத கப்பல் !
21 feb 2018 கட்சி தொடங்கி ஏறத்தாழ 8 மாதங்கள் ஆகிவிட்டன, இன்னும் இந்த மனிதரால் இது தான் கொள்கை என்று மருந்துக்கேனும் எதையாவது காட்ட முடிந்ததா ? கொள்கைக்கு தலைவன் தேவை, கொள்கையே இல்லாமல் தலைவன் எதற்கு ?
கட்சி தொடங்கும் முன்பே கொள்கையை பற்றி சிந்திக்காத மனிதனை தலைவனாக ஏற்பதே அவமானம், அதிலும் கட்சி தொடங்கி மாமாங்கம் ஆன பின்பும் கொள்கையை கூட முடிவு செய்யமுடியாத ஆள் இந்த சமூகத்திற்காக வேறு என்ன கழட்டி விட போகிறார் ?
இது போன்ற தனி மனிதர்களை நம்பி இயங்கும் கட்சிகள் இறுதியாக சர்வாதிகாரத்தை நோக்கியே செல்லும். ஒரு கொள்கையை அடித்தளமாக கொண்டு இயங்கும் கட்சிகளில் சேரும் தொண்டர்களுக்கு பின்பற்றவென கொள்கைகள் இருக்கும் , அதன் வழி நடப்பதும் அந்த லட்சிய கொள்கைகளை நிறைவேற்றுவதும் அந்த தொண்டனின் கடமையாகும், அப்படி இயங்கும் ஆட்களே வழி தவறும் மனித இயல்பு இருக்கும் நிலையில், இது போன்ற தனி மனித பிம்பத்தில் இயங்கும் இயக்கங்களின் தொண்டர்கள் எதை பார்த்து செருகின்றனர் என்பதே கேள்வி குறி இதனுடன் மனித இயல்புகளும் சேர்ந்தால் ? நிலைமை மேலும் மோசம் தான் ஆகும் !

இந்திய மாநிலங்களில் தமிழர்களும், மலையாளிகளும் தான் ஓரளவிற்கு அரசியல் படுத்தப்பட்ட மக்கள். அதிலும் தமிழர்கள் தான் மொழி, இட ஒதுக்கீடு மற்றும் சமூக நல திட்டங்கள் என்ற தளத்தில் அரசியலை முன்னெடுப்பவர்கள், அதற்கான கொள்கைகளை வரித்து கொண்டவர்கள். அதனால் தான் தமிழகத்தில் தேசிய அரசியலும், மத அரசியலும் சாதி அரசியலும் வெல்ல முடியாமல் தத்தளிக்கும் நிலை உள்ளது, இந்தியாவிற்கே பிரதமர் என்றாலும் தமிழகத்தில் கால் வைக்க கூட முடியாமல் திரும்பி செல்லும் நிலை உள்ளது.
இந்த கட்டுக்கோப்பை உடைத்து , வட இந்தியாவை போல நாமும் படிப்பறிவு இல்லாமல், சாதி மத மோதல்களில் சிக்கி சீரழிய வேண்டும் என்ற நோக்கில் தான் கமல் போன்ற Hamelin Piperகள் களம் இறக்கப்பட்டுள்ளனர், அவர்கள் பிடிலை வாசித்து இளைஞர்களை தன்வயபடுத்தி இலக்கற்ற வாழ்வை முன்னெடுக்க வைக்க வேண்டும், அதன் பின் இந்த piperகளின் முதலாளிகள் வந்து சாவகாசமாக இந்த கட்டமைப்பை நம் கண்முன்னே உடைத்து நொறுக்குவார்கள், அப்போது கமல்கள் வேறு முதலாளிக்கு வேலை செய்து கொண்டு இருக்க கூடும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக