வெள்ளி, 12 அக்டோபர், 2018

மூவாலூர் ராமாமிர்தம் அம்மையாரே தேவதாசி ஒழிப்பில் முன்னின்றார் முத்துலட்சுமி ரெட்டியை அதற்கு பெரியார் பயன்படுத்தினர்

டாக்டர். முத்து லட்சுமி ரெட்டி அவர்களின் தாய் தேவதாசி குலத்தில்
பிறந்தவர். தந்தை பார்ப்பனர். அவர் கல்வி கற்று இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் மற்றும் முதல் சட்ட மன்ற உறுப்பினர் என்று நியமனம் செய்யப் படும் வரை அவர் ஒரு பார்ப்பனப் பெண்ணாக வளர்க்கப்பட்டு, பார்ப்பன உள நிலையிலேயே வளர்ந்தார். அவருக்கு பார்ப்பனியத்துக்கான உயர் சாதிய எண்ணம் மற்றும் இந்திய தேசிய சித்தாந்தம் ஆகியவற்றில் ஈர்ப்பு அதிகம். 1926 இல் அவர் ச. ம. உ. நியமிக்கப் பட்ட பொழுது, பெண்களுகளுக்கு சட்டமன்ற உருப்பினராகும் தகுதி கிடையாது என்று இருந்த விதியை 1924 இல் மாற்றியமைத்து பெண்களுக்கு முழு உறிமை உண்டு என்று சட்டம் இயற்றி, முத்துலட்சுமி ரெட்டி ச. ம. உ. ஆக வழிவகுத்த நீதிக்கட்சியினருடன் மல்லுக் கட்டினார். காரணம் அவர்கள் பார்ப்பனிய விரோதிகள் என்பதால். அதனால் நீதிக் கட்சிக்கு எதிரணியில் செயலாற்றினார். இந்திய தேசியத்துக்காக முழு மூச்சுடன் வக்காலத்து வாங்கினார். இந்தக் காலக் கட்டத்தில் மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் தேவ தாசி ஒழிப்பிற்காக வீதியில் இரங்கி போராடிக் கொண்டிருந்தார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு அப்பொழுது தேவதாசி ஒழிப்பு பற்றி எந்தத் தாக்கமும் கிடையாது.மூவாலூர் அம்மையாருடன் எந்தத் தொடர்பும் கிடையாது. மறு தேர்தலில் நீதிக் கட்சி தோல்வியுற்றது. காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதில் பார்பனர்கள் பெரும்பான்மை பெற்றிருந்தனர். ஆனால் அது ஆட்சியமைக்க விரும்பவில்லை. சுப்புராமன் என்பவர் பொது முதல்வராக நியமிக்கப் பட்டார். மறுபடியும் முத்துலட்சுமி ரெட்டி ச. ம. உ. ஆக்கப் பட்டார்.
இப்பொழுது காங்கிரஸ் வெற்றி பெற்றதால் முத்துலட்சுமி ரெட்டிக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் காங்கிரஸில் உள்ள பார்ப்பனர்கள் முத்துலட்சுமி ரெட்டியை ஒரு பார்ப்பனராக அங்கிகறிக்க மறுத்தனர். மனமுடைந்த முத்து லட்சுமி ரெட்டிக்கு தேவதாசி பற்றிய சிந்தனை எழுந்தது.


இந்தக் காலக் கட்டத்தில் பெரியார் காங்கிரசை விட்டு விலகி நீதிக் கட்சியில் இணைந்தார். சுயமறியாதை இயக்கம் என்ற அரசியல் அல்லாத இயக்கத்தையும் கண்டார். மூவாலூர் அம்மையாரும் பெரியாருடன் இணைந்தார். அவர்கள் இருவரும் ச. ம. உ. இல்லை என்பதால் சட்ட மன்றத்துக்கு வெளியே தேவதாசி ஒழிப்பிற்காக எழுதியும் பேசியும் வந்தனர். சட்ட மன்றத்தினுள் இப்பொழுது முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பிற்கான குரலை எழுப்பினார். ஆனால் அவரை காங்கிரஸ் மற்றும் சுயராஜ்ய கட்சியில் பார்ப்பனியர் பெரும்பான்மையினர் என்பதால் ஆதரிக்கவில்லை. ஏற்கனவே நீதிக் கட்சியினருடன் மனம் திருந்துவதற்கு முன்பு பார்ப்பனியத்துக்காக மோதல் போக்கைக் கடைப்பிடித்தால் அவர்களும் மவுனித்தனர். இந்த சூழலில்தான் பெரியாரும் மூவாலூர் அம்மையாரும் முத்துலட்சுமி ரெட்டிக்கு ஆதரவாகக் களம் இறங்கினர். முத்துலட்சுமி ரெட்டி சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர உதவினார்கள். இருவரும் ச.ம. உ. இல்லை என்பதால் முத்துலட்சுமி ரெட்டியைப் பயன் படுத்தினர். பெரியார் தன் நண்பர்களான நீதிக்கட்சி உருப்பினரை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்தார். காங்கிரஸ் மற்றும் சுயராஜ்யவாதிகள் வெளி நடப்பு செய்தது. தீர்மானம் வெற்றி பெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிறகு முத்து லட்சுமி ரெட்டி பெரியார் பக்கம் திரும்பிப் பார்கவில்லை. அன்னி பெசன்ட் இயக்கத்தில் இரண்டறக் கலந்துவிட்டார். அவர் சாதி ஒழிப்பிற்காக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை. மகளிர் மேம்பாட்டுக்காக அவர் சேவை செய்திருக்கலாம். அதில் பார்ப்பனியப் பெண்களும் அடக்கம். காங்கிரஸ் ச. ம. உ. களில் இருந்த பார்ப்பனர் முத்துலட்சுமி ரெட்டியை பார்ப்பனராக உச்சி முகர்ந்து இருந்தால் தேவதாசி ஒழிப்பு க்கும் அவருக்கும் தொடர்பில்லாமல் போயிருக்கும். தன்னுடைய பார்பனிய அங்கிகாரத்திற்கா தேவதாசி ஒழிப்பை கையிலெடுத்தார். தேவதாசி ஒழிப்பிற்காக அவர்தான் முழுமுதற்காரணம் என்பது வரலாற்று பிழை. ச. மன்றத்துக்கு வெளியில் அவருக்கு முன்பாகவை தேவதாசி ஒழிப்பிற்காகப் போராடியவர் மூவாலூர் அம்மையார். கருத்தியலை உருவாக்கியவர் பெரியார். முத்துலட்சுமி ரெட்டியின் விரக்தி அவர்களுக்குப் பயன் பட்டது. தீர்மானம் நிறைவேற்றப் பட்டபின் அவர் ஏன் தன் தீர்மானம் வெற்றி பெற உதவியவர்களைத் திரும்பிப் பார்க்கவில்லை. அதுதான் அவரிடம் வாழ்ந்த பார்ப்பனிய உணர்வின் வெளிப்பாடு.
த.க.நிதி ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக