திங்கள், 22 அக்டோபர், 2018

கஷோகியின் பேட்டியே அவரது கொலைக்கு காரணம்? அந்த பேட்டி விடியோ


Ilavarasan M tamil.news18.com: பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்ட அன்று, அவரைப் போலவே உடைஉஅணிந்து ஒருவர் வெளியேறியதாக, சவுதி அரேபிய அரசு அதிகாரி ஒருவர் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்ட பிறகு அவரைப் போலவே உடையணிந்த ஒருவர் தூதரகத்திலிருந்து வெளியேறியதாக சவுதி அரேபிய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் (WASHINGTON POST) பத்திரிகையில் ஜமால் கஷோகி பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2-ம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் சந்தேகமான முறையில் கொல்லப்பட்டார். இதில் தங்களுக்கு தொடர்பில்லை எனக்கூறி வந்த சவுதி அரேபிய அரசு கஷோகி கொல்லப்பட்டதாக 2 நாட்களுக்கு முன் ஒப்புக்கொண்டது. அவரது இறப்பைப் பற்றி பல முரண்பட்ட தகவல்களையும் தெரிவித்து வந்தது. இந்நிலையில் அரசு அதிகாரி ஒருவர், 15 பேர் கொண்ட குழு கஷோகியைக் கொல்லச் சென்றதாகவும் கொலை நடந்ததும் குழுவைச் சேர்ந்த ஒருவர் கஷோகியின் உடையணிந்து வெளியே சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக