செவ்வாய், 23 அக்டோபர், 2018

ஐயப்பன் கோவில் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது - ஆதிவாசி தலைவி அறிக்கை பந்தள மகராஜா


ஐயப்பன் கோவில் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது - ஆதிவாசி தலைவி அறிக்கைமாலைமலர் : சபரிமலை ஐயப்பன் கோவில் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது. பந்தளம் மகாராஜா குடும்பத்தினர் இதனை கைப்பற்றிவிட்டனர் என்று கேரள ஆதிவாசி கோத்ரா மகாசபை தலைவி ஜி.கே.ஜானு கூறி உள்ளார். ஆதிவாசி தலைவி நானு. கொழிஞ்சாம்பாறை: கேரள ஆதிவாசி கோத்ரா மகாசபை தலைவி ஜி.கே.ஜானு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வரவேற்கத்தக்கது.
இதனை எதிர்த்து போராடுவது சரியானதல்ல. ஐயப்பன் கோவில் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது. சபரிமலையை ஆதிவாசி பகுதியாக அறிவிக்க வேண்டும். அனைத்து வயது பெண்கள் சபரிமலைக்கு அனுமதிப்பது முக்கியமல்ல.
அதைவிட ஐயப்பன் கோவிலில் பெண்கள் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். சபரிமலை ஐயப்பன் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது.
பந்தளம் மகாராஜா குடும்பத்தினர் இதனை கைப்பற்றிவிட்டனர். சபரிமலையை ஆதிவாசிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக