சனி, 6 அக்டோபர், 2018

அருந்ததியர் பிணம் கொண்டு செல்ல எதிர்ப்பு .. தலித்துகள் மீது தலித்துகளே ஜாதி வெறி?

Kathiravan Mumbai : நாளிதழில் வெளியான இந்த செய்தியின் தலைப்பை பார்த்ததும்.. ஓ.. சூத்திர சாதிவெறி.. வன்னிய சாதிவெறி.. தேவர் சாதிவெறி.. நாயக்கர் சாதிவெறி.. கவுண்டர் சாதிவெறி.. என்றெல்லாம் டெம்ப்ளேட்டாக பொங்காமல் கொஞ்சம் பொறுமை காக்கவும்..
ஏனெனில் இந்த சாதிவெறிக்கு சொந்தக்காரர்கள் பறையர்கள்.. பாதிப்புக்குள்ளானவர்கள் அருந்ததியர்கள்.
விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள தொழுவந்தாங்கால் கிராமத்தைச்சேர்ந்த அருந்ததியரான ஆரோக்கியச்சாமியின் இறந்த உடலை தங்கள் தெருவழியாக கொண்டு செல்லக்கூடாது என்று பறையர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
பதட்டம்.. பேச்சுவார்த்தை என்று ஒருவழியாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
பிற சாதியினரால் அருந்ததியினர் ஒடுக்கப்படுவது என்பது காலங்காலமாக இருக்கும் பஞ்சாயத்துதான்.. இவ்வளவு நாட்களாக அவர்களின் பிரச்சினையை பேச ஆட்கள் இல்லை என்பதால் வெளியே வரவில்லை.. இன்று அந்த சமூக இளைஞர்களும் படித்து மேலே வருகிறார்கள்.. தங்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளியே சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
கடந்த முப்பது ஆண்டுகால கல்வி மற்றும் அரசுப்பணி பொருளாதார வளர்ச்சி காரணமாக பறையர்களும் தேவேந்திரர்களும் ஓரளவுக்கு மேல் நிலைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

பணமும் பவுசும் வந்துட்டா எல்லாப்பயலுகளுக்கும் சாதி திமிர் வந்துரும்.. அப்படிதான் இப்போது பறையர் தேவேந்திரர் சாதியினர் பட்டியல் பிரிவில் தங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அருந்ததியர்களிடம் சாதிவெறியுடன் நடந்து கொள்வதும்.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. சாதி ஒழிப்பு போராளிகள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள். தபெதிக தோழர்கள் மட்டும் இதை எதிர்த்து அங்கு போராடியிருக்கிறார்கள்.
இதே விசயம்.. ஏதாவது ஒரு சூத்திரசாதியினர் பறையர்களுக்கு எதிராக செய்திருந்தால் போராளிகள் எப்படியெல்லாம் கொதித்திருப்பார்கள் தெரியுமா..
இந்த இடத்தில் ஒரு ரகசியம் சொல்லவா..
பட்டியல் சாதி பிரிவிலேயே, பறையர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் மட்டும் தான் சாதி ஒழிப்பு போராளிகள் எல்லாம் ஆன் லைன் மோடுக்கு வருவார்கள்.
ஏனெனில் இங்கு பெரும்பாலும் சாதி ஒழிப்பு போராளிகளாக அறிவுஜீவிகளாக.. களப்பணியாளராக என்று பல ரூபங்களாக உலா வருபவர்களில் பெரும்பாலனவர்கள் அந்த சாதியினர்தான்.
அதனால் பறையர்கள் பாதிக்கப்படும் பிரச்சினை பெரிதாக விவாதத்திற்குள்ளாக்கப்படும். அதுவே.. அவர்களால் அருந்ததியினர் பாதிக்கப்பட்டால் அது பேசுபொருளாக மாறாது.. போராளிகள் எல்லாம் ஆப் லைனுக்கு சென்று விடுவார்கள்..
பறையர் தெருவழியாக அருந்ததியர் பிணம் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட சம்பவம் நடந்து ஒரு வாரமாகிவிட்டது.. போராளிகளிடமிருந்து இப்படி ஒரு விசயம் நடந்ததாக குறித்த எந்த கொதிப்பும் இல்லை..
சாதிவெறிக்கு எதிரானவர்கள் என்றால் எல்லா சாதி ஆதிக்கத்திற்கும் எதிரானவர்களாகதான் இருக்க வேண்டும். தங்கள் சாதி என்று வரும்போது துபாய் ஈரோடு பக்கம் என்பதுபோல் கடந்துபோகக்கூடாது.
அதேப்போல் இன்னொரு விசயத்தை சொல்ல வேண்டும்..
பிற சாதியினரால் தேவேந்திரர்களோ பறையர்களோ அல்லது இவர்களால் அருந்ததியர்களோ பாதிக்கப்பட்டாலோ அரசு தரப்பிலிருந்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்..
அடிப்படையில் இந்தமாதி ரி அநீதிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்துவதே அயோக்கியத்தனம்.
சக மனிதனை மனிதனாக மதிக்காமல்
யார் சாதி பாகுபாடுடன் நடந்து கொண்டாலும் அது அயோக்கியத்தனம் தான்..
தூக்கி உள்ளப்போட்டு சங்குல மிதிச்சு சாதிவெறி திமிரை அடக்கணும்.. !
-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக