செவ்வாய், 2 அக்டோபர், 2018

காந்தி ஒரு ஏமாற்று பேர்வழி .. வில்லிங்டன் 1866 - 1941 Viceroy Lord Willingdon


காந்தி என்றொரு தொல்லை இருந்திராவிட்டால்இந்த உலகம் இன்னும்
அழகானதாக இருந்திருக்கும்.  அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் கடவுளால் உந்தப்பட்டது என்கிறார் . ஆனால் அவை எல்லாம் அரசியல் ரீதியான காய் நகர்த்தகளே என்பதை நாம் காணலாம்.
எவ்வளவு அற்புதமான மனிதர் இவர்.
இவர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சொன்னால் நாடே கிடுகிடுத்து விடுகிறது என்றெல்லாம் அமெரிக்க பத்திரிகைகள் எழுதுவதை காண்கிறேன்.
உண்மை என்னவென்றால், நடைமுறை உலகத்துக்கு அப்பால் வாழும் மந்திர தந்திரங்களிலும் மூட நம்பிக்கைகளிலும் ஊறிப்போன மக்களுக்கு மத்தியில் நாம் வாழ்கிறோம்.
அவர்கள் காந்தியை ஒரு புனிதமான விஷயமாக பார்க்கிறார்கள் .
நானோ இன்று உயிர் வாழ்பவர்களிலேயே மிகப் பெரிய ஏமாற்று பேர்வழியாக அவரை கருதுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக